பெண்களே உஷார்! ஆண்களின் இந்தப் பழக்கங்களை புறக்கணிக்க வேண்டாம்!
பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் முன்பு, அவர்களிடம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம்.
ஒரு ஆண் உங்களுடன் நன்றாக நடந்து கொண்டாலும், மற்றவர்களை பற்றி தவறாக பேசினால் அதனை எளிதில் கடந்து செல்ல கூடாது. அதில் கவனமாக இருக்க வேண்டும்.
மற்றவர்களை பற்றி தவறாக பேசும் நபர், நாளை உங்களையும் அப்படி பேச வாய்ப்புள்ளது. எனவே உங்கள் வருங்கால கணவர் மற்றவர்களுடன் எப்படி பழகுகிறார் என்பதிலும் கவனம் தேவை.
வயது கம்மியாக இருந்தாலும் ஆண்களுக்கு பொறுப்பு இருக்க வேண்டும். நீங்கள் விரும்பும் ஆண் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் சண்டைகள் வர அதிக வாய்ப்புள்ளது.
அனைத்து விசயங்களையும் சீரியஸாக எடுத்து கொள்ள கூடாது. அதே சமயம் எந்த ஒரு சூழ்நிலையையும் சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை என்றால் உங்களிடமும் அதே போல தான் இருப்பார்.
உங்களை சின்ன சின்ன விஷயத்தில் கூட முடிவு எடுக்கவிடாமல் ஆதிக்கம் செலுத்தினால் அந்த உறவு நீண்ட காலம் நிலைக்காது. உறவில் இருவரும் சமமான பங்கைக் கொண்டிருக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள பழக்கங்கள் நீங்கள் காதலிக்கும் பையனிடம் இல்லை என்றால் அவர் உங்களுக்கு சரியான ஜோடி இல்லை என்பது சாத்தியம். எனவே உங்கள் ஜோடியை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.