தூங்கி எழுந்ததும் மீண்டும் தூக்கம் வருதா... உடலில் இத்தனை பிரச்னைகள் இருக்குனு அர்த்தம்!
தூங்கி எழுந்ததும் சுறுசுறுப்பாக வேலைகளை தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால், நன்றாக தூங்கி எழுந்த பின்னரும் கூட உடல் சோர்வுடன் மீண்டும் தூக்கம் வருவது போல் இருப்பினும், இந்த ஐந்து முக்கிய பிரச்னைகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
தூங்கும்போது வரும் மூச்சுத்திணறல்: நீங்கள் சரியாக 8 மணிநேரம் தூங்கியும் உடல் சோர்வாக இருந்தால், இந்த தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலும் (Sleep apnea) ஒரு காரணமாக இருக்கும். இதற்கு சரியான நேரத்தில் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்வது அவசியது.
சமநிலையற்ற உணவுப் பழக்கவழக்கம்: அனைத்து ஊட்டச்சத்துகளை பெறும் வகையில் சமநிலையான உணவு பழக்கவழக்கத்தை கைக்கொள்ளாவிட்டால் உடலில் பல பிரச்னைகள் வரும். உங்களின் உணவே நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கவும், சோம்பேறியாக இருக்கவும் காரணமாகும். எனவே, சரியான உணவுப் பழக்கவழக்கத்தை மேற்கொண்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
வாழ்வில் கவலையா...?: எப்போதும் கவலையாக இருக்கும்போது உடல்நலனும் கவலைக்குரியதாகும். அழுத்ததிலேயே இருப்பதால் உங்கள் உடல் எப்போதும் விழித்திற்கும். மூளை எப்போதும் இயக்கத்திலேயே இருக்கும். இதனால், தூக்கத்திலும் உங்கள் மூளை செயல்பட்டுக்கொண்டே இருக்கும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. இதனால், தூங்கி எழுந்தாலும் உங்களால் சுறுசுறுப்பாக செயல்பட இயலாது. எனவே, கவலையை கைவிடுங்கள்.
வைட்டமிண் குறைவு: சரியான உணவு பழக்கவழக்கத்தை கைக்கொள்ளாவிட்டால் உடலில் வைட்டமிண் குறைப்பாடு ஏற்படும் இதனால், உடலில் சக்தியே இருக்காது. குறிப்பாக, சிவப்பு ரத்த அணுக்களில் முக்கிய பங்கை வகிக்கும் வைட்டமிண் B12 குறையும்போது உடல் மிகுந்த சோர்வுடன் காணப்படும். சிக்கன், முட்டை, மீன், பால் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் இந்த பிரச்னையை தீர்க்கலாம்.
உடல் இயக்கம் குறைவது: தொடர்ந்து கணினி முன் வேலைப்பார்ப்பது, நீண்டநேரத்திற்கு எவ்வித உடற்செயல்பாடும் இல்லாமல் படம் அல்லது சீரிஸ்களை பார்ப்பது ஆகியவையும் இந்த பிரச்னை வர முக்கிய காரணமாக இருக்கலாம். உடல் இயக்கம் குறையும்போதும் இந்த பிரச்னைகள் ஏற்படும். எனவே, தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்ட அனைத்தும் பொது தகவல்களே ஆகும். இந்த பிரச்னைகள் உங்களுக்கும் இருந்தால், முறையான மருத்துவ ஆலோசனை பெற்று அதற்கு சிகிச்சை பெற வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதிசெய்யவில்லை.