சனி பெயர்ச்சி, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
)
ஏப்ரல் 29ம் தேதி சனி பெயர்ச்சி நிகழும்
2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிபகவான் ராசி மாறுவார். ராசி மாற்றம் மூலம் சனிபகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
)
சனி தசை
சனியின் ராசி மாற்றத்தால் 12 ராசியிலும் சுப, அசுப பலன் தென்படும். சில ராசிகளில் எழரை நாட்டு சனி தொடங்குகிறது மற்றும் சில ராசிகளில் சனி தசை தொடங்குகிறது. அதன்படி தற்போது மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசை நடக்கிறது. கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் தொடங்கும் போது கடகம் மற்றும் விருச்சிக ராசிகயில் சனி தசை தொடங்கும்.
)
தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
கும்ப ராசியில் சனி பிரவேசிக்க உள்ளதால் தனுசு ராசிக்காரர்களுக்கு எழரை நாட்டு சனியின் பாதியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
மீன ராசிக்கு பாதிப்பு ஏற்படுமா?
22 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் எழரை நாட்டு சனி தொடங்கப் போகிறது. அதன்படி கும்ப ராசிக்கு சனி கிரகம் பிரவேசித்த்தும் மீன ராசிக்காரர்களுக்கு எழரை நாட்டு சனியின் பலன் தெரிய வரும். மீனத்தை ஆளும் கிரகம் வியாழன். வியாழனுக்கும் சனிக்கும் உள்ள தொடர்பு சாதாரணமானது. இந்த இரண்டு கிரகங்களும் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை, எனவே எழரை நாட்டு சனியால் மீன ராசிக்கு மோசமான விளைவை ஏற்படாது.