நெய்யில் வறுத்த தாமரை விதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நெய்யின் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமம் மற்றும் முடிக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் தாமரை விதையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
தாமரை விதையை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் நச்சுத்தன்மையை அடியோட நீக்க உதவும்.
கலோரிகள் குறைவாக இருப்பதாலும், நார்ச்சத்து அதிகம் இருப்பதாலும், தாமரை விதை சாப்பிட்ட பிறகு, வயிறு நீண்ட நேரம் நிரம்பியிக்கும், இதனால் உடல் எடையை குறைக்கலாம்.
தாமரை விதையில் அதிக அளவு கால்சியம் மற்றும் நெய்யில் வைட்டமின் டி உள்ளதால் தாமரை விதையை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் எலும்புகள் வலுவடைந்து மூட்டு வலி குறையும்.
தாமரை விதையில் சோடியம் குறைவாக உள்ளது, இதன் காரணமாக இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் மற்றும் நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. எனவே, நெய்யில் வறுக்கப்பட்ட தாமரை விதை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இரும்பு, புரதம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் தாமரை விதையில் காணப்படுகின்றன, இது கர்ப்ப காலத்தில் பெண் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.