இரத்த அழுத்தம் முதல் எடை இழப்பு வரை: ஆப்பிள் பழத்தின் அசத்தும் நன்மைகள்
குறைந்த கலோரி கொண்ட பழங்களில் ஆப்பிள் ஒன்றாகும். நடுத்தர அளவிலான ஆப்பிளில் 60 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதாவது அதை உட்கொள்வதால் எடை அல்லது சர்க்கரை அளவு அதிகரிக்காது.
ஆப்பிள் பழம் தவிர, ஜூஸ், சைடர் மற்றும் ஆப்பிள் சாஸ் ஆகியவையும் உட்கொள்ளப்படுகின்றன. ஆப்பிளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்னென்ன குணங்கள் உள்ளன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைக்கிறது. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கின்றது.
ஆப்பிளில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அதன் தோலில் க்வெர்செடின் காணப்படுகின்றது. ஆன்டிஆக்ஸிடன்ட் உணவுகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கிறது. இது பல நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவியாக இருக்கும். இது தவிர, ஆப்பிள் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது செரிமானத்திற்கு உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள்களை உட்கொள்வது ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும். அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த சர்க்கரை அளவு உள்ள ஆப்பிள் போன்ற பழங்கள் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்கும்.
உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கும் ஆப்பிள் சாப்பிடுவது நன்மை பயக்கும். பல ஆய்வுகள் ஆப்பிள் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று கண்டறிந்துள்ளன. இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும்.
ஆப்பிள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது. இதன் மூலம் இதய நோய்களுக்கான அபாயத்தையும் ஆப்பிள் குறைக்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.