சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகங்கள்: இந்த ராசிகள் மகிழ்ச்சி மழையில் நனைவார்கள்

Sat, 08 Jul 2023-3:19 pm,

சுக்கிரன்: செல்வம், ஆடம்பரம், உலக இன்பம் மற்றும் செழுமை ஆகியவற்றைக் கொடுக்கும் சுக்கிரன், சூரியனின் ராசியான சிம்மத்தில் பெயர்ச்சியானார். 

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை: சுக்கிரன் சிம்மத்தில் நுழைதுள்ள நிலையில், செவ்வாய் ஏற்கனவே அங்கு உள்ளார். இதனால் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உருவாகி லக்ன பாங்க யோகம் உருவாகிறது. 

லக்ஷ்மி நாராயண யோகம்: சுக்கிரன் ஜூலை 23, 2023 அன்று காலை 6:00 மணிக்கு சிம்மத்தில் வக்ரமாகி, ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 11:30 வரை அதே வக்ர இயக்கத்தில் இருந்து, பின்னர் கடகத்திற்கு திரும்புவார். இந்த நேரத்தில் புதனும் சுக்கிரனும் ஒன்றாக வருவார்கள். இதனால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகும். 

ராசிகளின் இதன் தாக்கம்: சுக்கிரன் செவ்வாய் மற்றும் புதனுடன் சேர்வதால் உருவாகும் ராஜயோகத்தின் தாக்கம் ஆனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த சஞ்சாரம் வலுவான பலன்களை அளிக்கும். 

துலாம்: சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சுபமாக இருக்கும். வருமான அதிகரிப்புடன், புதிய வருமான வழிகள் உருவாகும். புதிய வேலையைத் தொடங்குவதற்கு சாதகமான காலமாக இது இருக்கும். நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், உங்கள் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். பொருளாதார விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். 

மேஷம்:  சிம்மத்தில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் திருமண வாழ்க்கை மேம்படும். காதல் விவகாரங்களில் நெருக்கம் உண்டாகும். மாணவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் சாதகமான காலம். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பழைய நோயிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டில் புதிய வாகனங்கள், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். 

ரிஷபம்: சுக்கிரனின் இந்த பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு வாகனம் மற்றும் சொத்து வாங்கும் யோகத்தை அளிக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். விருந்தினர்கள் வரலாம். வேலை செய்யும் தொழிலில் வெற்றியுடன் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நிதி விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். சொத்து, ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

கும்பம்: பண வரவு நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். கூட்டாண்மைப் பணி சாதகமாக அமையும். வணிகத் துறையில் லாபம் பெறலாம். தற்செயலான பண வரவுக்கான அறிகுறிகள் உள்ளன. ஊடகத்துறையில் தொடர்புடையவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link