Health News: அன்னாசிப் பழத்தில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு, விவரமாக இங்கே காணலாம்!!
அன்னாசிப்பழத்தில் அதிகமான மாங்கனீசு இருப்பதால், வலுவான எலும்புகளின் உருவாக்கத்தில் இந்த பழம் உதவும். அன்னாசிப்பழச்சாறு நமது ஈறுகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதோடு பற்களை வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் பீட்டா கரோட்டின் நிரம்பியுள்ளதால், இது மாகுலர் சிதைவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
அன்னாசிப்பழத்தில் அதிக நார்சத்தும் குறைந்த கலோரிகளும் உள்ளதால், இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. அன்னாசிப்பழம் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. கூந்தல், தோல் மற்றும் நகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை அன்னாசிப்பழம் வழங்குகிறது.
அன்னாசிப்பழத்தில் இயற்கையாக சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. ஆகையால், இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல. அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோம்லைன் நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேரும் போது தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஆகையால், மருந்து மாத்திரை உட்கொள்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இதை உட்கொள்ள வேண்டும். முழுமையாக பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது அதை பழரசமாக குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம். அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் கரை படியும். இது பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். அனாசி பழத்தில் அதிக அளவிலான அமிலத்தன்மை உள்ளதால், இதை சாப்பிடுவதால் சிலருக்கு லேசான அலர்ஜி, வயிற்று எரிச்சல் ஆகியவை ஏற்படலாம்.