நோய்கள் எதுவும் அண்டாமல் இருக்க... இந்த ‘5’ மசாலாக்களை அவசியம் உணவில் சேர்க்கவும்!
இந்திய சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் உணவிற்கு மணமும் சுவையும் கொடுப்பதுடன் கூடவே, பல ஆரோக்கிய குணங்களை கொண்டுள்ளது. இதனை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், பல நோய்களுக்கு எதிரான கவசமாக அது செயல்படும்.
இஞ்சியை தேநீர் அல்லது உணவில் மசாலாப் பொருளாக பயன்படுத்தப்படுவதை தவிர பல நோய்களுக்கான மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மாதவிடாய் காலங்களில் இதன் கஷாயத்தை குடிப்பதால் வலி மற்றும் பிடிப்புகளில் நிவாரணம் கிடைப்பதுடன், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். சளி தொல்லை நீங்கவும் இஞ்சி உதவும்
மஞ்சள் என்பது இந்திய கோழியில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா ஆகும், இதில் உள்ள குர்குமின் புற்றூநோய் உட்பட பல நோய்களுக்கான மாமருந்தாக உள்ளது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதனை உட்கொள்வதும் நோயின் மீது தடவுவதும் உதவும். இது வலி, காயம், நாள்பட்ட நோய்கள் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
ஏலக்காய் உணவுக்கு மணம் மற்றும் சுவை சேர்க்கிறது. இதனை உட்கொள்வதன் மூலம் உடலில் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். ஏலக்காயை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் வராது அதே சமயம் பிபி கட்டுப்பாடும் இருக்கும்.
இலவங்கப்பட்டை பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் இயற்கை சர்க்கரை இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு இது நன்மை பயக்கும். இலவங்கப்பட்டை சாப்பிடுவது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதற்கும், இதய ஆரோக்கியத்துக்கும் உதவியாக இருக்கும்.
சீரகம் உடலில் செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இரவில் ஊறவைத்து, காலையில் அதன் நீரை குடிப்பதாலும் உடல் பருமன் குறையும். ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.