Mango: இளமையை காக்கும் மாம்பழத்தை தினமும் டயட்டில் சேர்க்கவும்
மாம்பழங்களில் உள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜென் புரதத்தை உடலில் சுரக்க உதவி புரிகிறது. இது உங்களை இளமையாக வைக்கும்.
நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. மூளையின் செயல்களை பாதுகாத்து மேம்படுத்த மிகவும் முக்கியமான வைட்டமின், பி6 என்பது குறிப்பிடத்தக்கது.
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ள மாம்பழம், உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இயற்கை மருந்தாக அமைகிறது.
மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திடும்.
மாம்பழத்தில் அதிகமாக இரும்புச் சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.