Spinach: ரத்த சோகையை விரட்டும் கீரை
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 14 – 18 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோய் ஏற்படுகிறது.சில காய்கறிகள் சாப்பிட்டால் உடலில் இரத்த சோகை என்பதே ஏற்படாது.
இரத்த சோகை என்ற நோய் பல நோய்களுக்கு காரணமாக அமைந்தி விடுவதோடு, நமக்கு அதிக அளவிலான சோர்வை கொடுத்து, நமது இயல்பான வாழ்க்கைக்கு பெரிய தடைக் கல்லாக மாறி விடும் சாத்தியம் உண்டு.
கீரையை உட்கொள்வதால், இரத்த சோகை நீங்குவதோடு, இதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களின் பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு கீரை ஒரு வரப்பிரசாதம். அதாவது, இதை உட்கொண்டால், உங்கள் இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.
கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. உடலில் இரும்புச்சத்து இல்லாதவர்கள் அதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். அதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.