நகர்புற காடு: வானளாவிய கட்டிடத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள்
கட்டிடக் கலைஞர் ஸ்டெபானோ போரி, செங்குத்து காடுகளின் கருத்தை மனதில் வைத்து, மிலனில் கட்டியிருக்கும் தனித்துவமான அடுக்குமாடி குடியிருப்பில் அனைத்து தளங்களிலும் மரகன்று பயிரிடப்பட்டுள்ளது.
யூரோ நியூஸ் கிரீனில்' வெளியான அறிக்கையின்படி, கட்டிடக் கலைஞரும் நகரத் திட்டமிடுபவருமான ஸ்டெபானோ போரி சில ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு கட்டிடங்களில் மரங்கள் மற்றும் தாவரங்களை அனைத்து தளங்கலும் பயிரிட்டு நகர்ப்புற காடுகளை அவர் தயார் செய்துள்ளார்.
மிலன் 70 மற்றும் 80 களில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாம்பல் நகரமாகவும் தொழில்துறை நகரமாகவும் கருதப்பட்டது. இந்த குடியிருப்பில் 400 வீடுகள் மற்றும் சில அலுவலகங்கள் உள்ளன. அதன் கட்டுமானம் முடிந்ததும், அதன் வடிவமைப்பு 'சர்வதேச உயரிய விருது' மற்றும் 'உலகளவில் சிறந்த உயரமான கட்டிடம்' போன்ற புகழை பெற்றது.
இன்று மிலனில் உள்ள இந்த அபார்ட்மெண்ட், நாட்டின் இயற்கையை நேசிக்கும் மக்களின் சிறந்த குடியிருப்புப் பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு 21 ஆயிரம் மரங்களும் செடிகளும் உள்ளன. கான்கிரீட் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த நகர்ப்புற காட்டில் 300 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் எப்போதும் இயற்கையோடு தொடர்பில் இருப்பவர்கள்.
2007 ஆம் ஆண்டில், ஸ்டெபனோ போரி துபாய் சென்ற போது, சூரியனின் கதிர்கள் நேரடியாக கட்டிடங்களின் மீது படும் போது, அங்குள்ள வெப்பமும் கூடுவதை அங்கு உணர்ந்தார். அங்குள்ள கட்டிடக்கலையை கருத்தில் கொண்டு, உயரமான கட்டிடங்களில் வெப்பத்தை தடுக்க மரங்கள் மற்றும் செடிகளை நடும் கான்செப்ட்டை போரி தயாரித்துள்ளார்.