நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் ‘சர்க்கரை கொல்லி’!
தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த நோயிலிருந்து விடுபட, சில மருந்துகளுடன், வீட்டு வைத்தியத்தை பின்பற்றுவதன் மூலம் இரத்தில் உள்ள சர்க்கரையை சிறந்த வகையில் கட்டுப்படுத்தலாம்.
சிறுகுறிஞ்சான் அல்லது கோகிலம் (Gymnema sylvestre) என்ற மூலிகை ஒரு வரப்பிரசாதம் எனலாம். இது தென், மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளில் அதிகம் காணப்படும் மூலிகைச் செடி. சிறுகுறிஞ்சான் என்ற மூலிகை, சர்க்கரை கொல்லி என்றும் அழைக்கப்படுகிறது.
சிறுகுறிஞ்சான் இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாய் இலை போன்று காணப்படும். இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களாக நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இந்த மூலிகை உள்ளது. சிறுகுறிஞ்சான் இலைகளைச் சிறிதளவு மென்று பிறகு, இனிப்பான உணவுகளை எடுத்துக் கொண்டால், இனிப்புச்சுவையே நாவிற்குத் தெரியாது. இதன் காரணமாக இவை, ‘சர்க்கரை கொல்லி’ எனப்படுகிறது.
சிறு குறிஞ்சான் என்னும் சர்க்கரை கொல்லி இலைகள் டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய இரு வகை நீரிழிவு நோய்களை குணப்படுத்தும். இது கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர் பெறச் செய்து இன்சுலின் அளவை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு நெய்யில் குழைத்து சாப்பிட்டால் நாளைடைவில் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்.
நீரிழிவு நோயை குணப்படுத்துவதை தவிர, கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பை (HDL) அதிகரிப்பதன் மூலமும் கொழுப்பைச் சமநிலைப்படுத்துவதற்கும் மிகவும் உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.