Anti-Ageing Tips: வயசானாலும் இளமையா இருக்க.... ‘இந்த‘ விதைகள் டயட்டில் இருக்கட்டும்

Tue, 20 Aug 2024-1:24 pm,

Anti-Ageing Tips: இன்றைய மோசமான உணவு பழக்கம் காரணமாக, இளமையிலேயே முதுமை நம் வீட்டின் கதவை தட்டி விடுகிறது. நீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்க, டயட்டில் சில உணவு வகைகளை சேர்ப்பது பலன் தரும். அந்த வகையில் முதுமை அண்டாமல் இருக்க உதவும் சில சிறந்த விதைகள் குறித்து நிபுணர்கள் கூறுவதை அறிந்து கொள்ளலாம்.

 

எள்ளு: புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம் சத்து நிறைந்த எள், எலும்பை வலுப்படுத்துவதோடு, சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. கூந்தல் வலுவாக இருக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும் உதவுகிறது.

 

பூசணி விதைகள்: துத்தநாகம் மற்றும் சத்து நிறைந்த பூசணி விதைகள், சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுவதோடு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

சூரியகாந்தி விதைகள்: நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, சருமத்தை இளமையாக வைத்திருக்கும் ஆற்றல் கொண்ட சூரியவாந்தி விதைகள் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தவை. இதில் வைட்டமின் ஈ மற்றும் செலினியம் நிறைந்துள்ளதால், செல்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.

 

சியா விதைகள்: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சியா விதைகள், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி இளமையாக இருக்க உதவுவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கும் சியா விதைகள் சிறந்த தேர்வாக இருக்கும்.

ஆளி விதைகள்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆளி விதைகள், சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுவதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை வளர்ச்சி, கண் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் ஆகியவற்றையும் மேம்படுத்தும்.

 

ஆரோக்கியமான உணவு பழக்கம்: இளமையாக இருக்க மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதைகளுடன், காய்கறிகள் பழங்கள் தானியங்கள் உள்ளிட்ட பலவகை சத்துக்கள் நிறைந்த உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்வது அவசியம். அதோடு, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும், துரித உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருப்பதும் அவசியம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link