இசையமைப்பாளர் அனிருத்துக்கு ஏஆர் ரஹ்மான் வைத்த வேண்டுகோள்!
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. பொங்கல் அன்று வெளியாகும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, நித்தியா மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக அனிருத், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரகுமான், சக இசைமைப்பாளரான அனிருத்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “அனிருத் தற்போது நன்றாக இசையமைக்கிறார். பல ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். 10000 இசையமைப்பாளர்கள் மத்தியில் தனித்து இருக்கிறார்" என்று கூறினார்.
"உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் க்ளாசிகல் இசையை படித்துவிட்டு, அதில் நிறைய பாடல்கள் இயக்க வேண்டும். அதன் மூலம் நிறைய இளம் தலைமுறையினருக்கு அந்த இசை சென்று போய் சேரும்” என்று ரகுமான் தெரிவித்துள்ளார்.
காதலிக்க நேரமில்லை விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வரும் ஜனவரி 14-ம் தேதி காதலிக்க நேரமில்லை படம் வெளியாக உள்ளது.