பாடாய் படுத்துவார் புதன்... சில ராசிகளுக்கான பலன்களும்... பரிகாரங்களும்!
புதன் வக்ர நிவர்த்தி: ஏப்ரல் 25ஆம் தேதி மாலை 05:49 மணிக்கு மீன ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால், சில ராசிக்காரர்களின் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும், அதனால் பெரும் நஷ்டங்களை சந்திக்க நேரிடும். எனினும் சில பரிகாரங்கள் மூலம் கெடு பலன்களில் இருந்து விடுபடலாம்.
மேஷம்: புதனின் வக்ர நிவர்த்தியினால் மேஷ ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் வரலாம். கடின உழைப்பிற்கு பலன் இருக்காது. வேலையில் அழுத்தம் இருக்கும். உங்கள் வேலையை மாற்ற முயற்சி செய்யலாம், ஆனால் வெற்றி பெறாது. மனதில் அதிருப்தி நிலவும். நிதி நிலைமை பாதிக்கும். பண நஷ்டம் ஏற்படும். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
சிம்மம்: புதனின் வக்ர நிவர்த்தி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இல்லை. உத்தியோகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். திடீரென்று உங்கள் தொழிலின் வேகம் குறையும். உங்களுக்கு சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்காது. நீங்கள் சில இழப்புகளை சந்திக்க நேரிடலாம். ஆனால் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், சேதத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம். பணம் தொடர்பான திட்டங்கள் வெற்றியடையாது.
விருச்சிகம்: புதனின் வக்ர நிவர்த்தி விருச்சிக ராசியினருக்கு பெரும் சவால்களை கொடுக்கும். பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது. இதனால் உங்கள் மனம் வருத்தமாக இருக்கும். மூத்த அதிகாரிகளின் ஒத்துழையாமையால், சில சமயங்களில் வேலையை மாற்ற நினைப்பீர்கள். கடினமாக உழைத்தாலும் வெற்றி பெற முடியாது. மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். உங்கள் பணம் சம்பாதிக்கும் திறனும் பாதிக்கப்படும். உங்கள் செலவுகளும் அதிகரிக்கலாம்.
மீனம்: புதனின் வக்ர நிவர்த்தியினால் மீன ராசிக்காரர்களின் செலவுகள் கூடும். கடின உழைப்பிற்கான பலனை எளிதில் பெற முடியாது. தொழில் வாழ்க்கையில் மோதல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் சற்று கடினமாக உழைக்க வேண்டி வரும். இது, உங்களை சோர்வடையச் செய்யும். வருமானம் பாதிக்கப்பட்டு, நிதி நிலை பாதிக்கப்படலாம். பணம் சம்பாதிக்கும் திறன் பலவீனமாகிவிடும். குடும்பத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்படும்.
புதன் விநாயகப் பெருமானுடன் இணைந்திருப்பதால், எதிர்மறை தாக்கம் உள்ள ராசிக்காரர்கள் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். விநாயகப் பெருமானுக்கு 21 கொழுக்கட்டை செய்து அர்ப்பணிப்பதுடன் அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்து வர, புதனின் பாதகமான பாதிப்புகள் குறையும். பச்சை நிற ஆடைகள், பச்சைக் காய்கறிகள், பச்சைப் பயிறு மற்றும் பச்சை நிறப் பொருட்களை புதன்கிழமை தானமாக வழங்கினால், புதனின் பாதகப் பலன்கள் குறையும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.