Jupiter Transit: அஸ்தமன குருவால் அவதிப்படப் போகும் 6 ராசிக்காரர்கள்

Fri, 18 Feb 2022-8:03 am,

கன்னி ராசிக்காரர்களுக்கு, இந்த நேரம் அவர்களின் தொழிலில் சிரமங்களைக் கொண்டுவரும். வேலை மாற வேண்டி வரலாம். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படலாம். இந்த நேரத்தில் கவனமாக முடிவெடுக்கவேண்டும். மார்ச் 27க்கு பிறகு நிலைமை மாறிவிடும்

அஸ்தமனமாகும் குருவினால், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலையில் சிரமங்கள் ஏற்படும். பணியிடத்தில் அதிருப்தியே நிலவும். சகாக்களால் பிரச்சனைகள் ஏற்படும். இந்த நேரத்தை பொறுமையுடன் எதிர்கொள்ளுங்கள்.

தனுசு ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இடமாற்றம் நேரிடும். அல்லது வேலையில் மாற்றம் ஏற்படலாம். அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. பொறுமையாய் இருந்தால் போதும்.

மகர ராசிக்காரர்களுக்கு மார்ச் 27 வரை குடும்பத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். வீட்டில் ஒருவருடன் தகராறு ஏற்படலாம். பெரியவர்களிடம் சண்டை வந்தாலும் அமைதியாக இருக்கவும். தொழிலும் சற்று மந்தமாகவே இருக்கும். 

கடக ராசிக்காரர்களுக்கு குருவின் அஸ்தமனம் தொழிலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்காது. சிறிய வேலைகளைச் செய்வது கூட கடினமாக இருக்கும்.

கும்ப ராசிக்காரர்கள் வேலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். எதிர்பாராத பிரச்சனைகள் வரலாம். இடமாற்றம் ஏற்படலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link