வெளிநாட்டவரையும் ஈர்க்கும் இந்தியாவின் மர்மக் கோவில்கள்! அதிர்ச்சியூட்டும் ஆச்சரிய ஆலயங்கள்!
இன்றுவரை ரகசியங்கள் வெளிவராத பல கோவில்கள் இந்தியாவில் உள்ளன. பக்திக்காக மட்டுமல்ல, ரகசியத்திற்காக பிரபலமான கோவில்களைப் பார்க்கவும் பலதரப்பட்ட மக்கள் இந்த கோவில்களுக்கு படையெடுக்கின்றானர்
ஆன்மீகத்தினால் உலகை ஈர்க்கும் இந்தியாவின் புராதனமான கோவில்கள் வழிபாட்டிற்காக இருக்கிறது என்றால், சில மர்மங்களால் நிரம்பியுள்ளன. அனைத்திற்கும் பின்னணியும் கதைகளும் உண்டு என்றாலும் அவை மக்களை ஈர்க்கின்றன என்பதை மறுக்க முடியாது
ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீரபத்ரா கோயில் இந்தியாவின் மர்மமான கோயில்களில் ஒன்றாகும். வீரபத்ர கோவிலில் உள்ள 70 பெரிய தூண்களில் ஒன்று மட்டும் கோவிலின் தரையைத் தொடுவதில்லை, ஆனால் கூரையைத் தொடுகிறது. தொங்கு தூண் என்று அழைக்கப்படும் இந்த தூணின் தரைப்பகுதியில், தூணிற்கும் தரைக்கும் இடையில் துணியை கூட விட்டு எடுத்து இந்த இடைவெளியை நிரூபிக்கின்றனர். இந்த மர்மத்திற்கான காரணத்தை கட்டடக்கலை வல்லுநர்களும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்
மெஹந்திபூர் பாலாஜி கோவில் மிகவும் பிரசித்தமான கோவிலாகும். ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு, பேய் அல்லது பிசாசு பிடித்தவர்களை அழைத்து வந்தால் குணமாகும் என்பது நம்பிக்கை
பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கதவில் மாலை நேரத்தில் கடல் அலைகளின் சத்தம் கேட்பதாக ஐதீகம். கோவிலின் மேல் உள்ள கொடி, வழக்கத்துக்கு மாறாக காற்றின் எதிர் திசையில் பறப்பதற்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றாகும். இங்கு ஏராளமான பொக்கிஷங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த புதையல் கோவிலின் ரகசிய அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பொக்கிஷங்களை வெளியே எடுக்க வேண்டியிருந்தாலும், அதற்கான மர்ம மந்திரம் உள்ளது, அதை முறைப்படி சொல்லி, பூஜைகளை முறையாக செய்த பிறகுதான் பொக்கிஷத்தைத் திறக்க முடியும்.
மகாராஷ்டிராவின் கைலாஷ் கோவில் பாறைகளால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் மேலிருந்து கீழாக வரும் பாறையால் கட்டப்பட்டுள்ளது, அது எப்படி என்ற ரகசியம் இன்னும் யாருக்கும் புரியவில்லை.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது