Astro: `இந்த` நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள்!
ஜோதிடத்தில் பிறந்த நட்சத்திரம் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. வேத ஜோதிடத்தில், அறிஞர்கள் ராசியை 27 வெவ்வேறு நட்சத்திரங்களாக பிரித்துள்ளனர். இதில் 4 நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறப்படுகிறது.
அஸ்வினி நட்சத்திரம் ராசியின் முதல் நட்சத்திரமாக உள்ள நிலையில், மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நக்ஷத்திரத்தில் பிறந்த குழந்தைகள் கூர்மையான அறிவாற்றல், கண்ணியம் மற்றும் மன வலிமை கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சில சிறப்பு குணங்கள் இருக்கும். வேலையை விரைந்து முடிக்கும் திறன், நேர்மறையான சிந்தனை, செய்யும் செயலில் ஈடுபாடு ஆகியவை இருக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ராசியின் இரண்டாவது நட்சத்திரமாக இருப்பதால், பரணி நட்சத்திரம் அதன் அதிபதியான சுக்கிரனால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஆசை மற்றும் தியாக உணர்வு அதிகம் இருக்கும். குறைவான பேச்சு நிறைவான வேலை இவர்களது சிறப்பு. வசீகரமான கண்கள் மற்றும் முகத்தில் வசீகரமான புன்னகை கொண்டவர்கள். மிகவும் தைரியமானவர்கள்.
பூச நட்சத்திரம் எட்டாவது நட்சத்திரம். பூச நட்சத்திரம் என்பது சந்திரனின் அனைத்து ராசிகளிலும் அதிக பண்புகளைக் கொண்ட நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகள் கூர்மையான அறிவு கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் பெற்றோர்களை மதிப்பவர்களாகவும், ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவும். உறவுகள், மக்கள் மற்றும் சூழ்நிலைகளைக் கையாளும் திறன் கொண்டவர்களாகவும், தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு பலம் கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
மக நட்சத்திரம் ராசியின் பத்தாம் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் பிறப்பிலிருந்தே மரியாதைக்குரிய மற்றும் அரசர்களுக்கு உரிய இயல்புடன் தலைவர்களாக வளர்வார்கள். இந்தக் குழந்தைகள் எந்தத் துறைக்குச் சென்றாலும் அதில் சிறந்து விளங்குகிறார்கள். புத்திசாலித்தனமாக தங்கள் வேலையைச் செய்யக்கூடியவர்கள். -செலவுகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர்கள். பெற்றோருடன் நல்ல உறவை வைத்திருப்பார்கள்.