சௌபாக்கிய யோகம்... தன லாபத்தை அள்ளப் போகும் ‘5’ ராசிகள்..!!

Wed, 21 Feb 2024-1:12 am,

Lucky Zodiac 21st February 2024: சோபக்ருது வருடம் மாசி மாதம் 9ம் நாள், பிரதோஷ நாளான இன்று மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புதன் பிரதோஷ காலத்தில் உருவாகும் சுபயோகத்தின் பலன்களை எந்தெந்த ராசிகள் பெற போகிறது என்பதை பார்க்கலாம்.

ரிஷப ராசியினருக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் பிறக்கும். எதிர்பாராத பணவரவு தான் நிதிநிலை மேம்படும். நீண்டலாக நாளாக வாட்டி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். 

கடக ராசியினர், சவால்களை சாதனையாக மாற்றும் திறனால் அனைவரையும் கவர்வார்கள். மனதிற்கு பிடித்த இடத்திற்கு பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.

சிம்ம ராசிகளுக்கு எதிர்பாராத வகையில் நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மன கவலைகள் குறையும். மனைவி உடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

விருச்சிக ராசியினருக்கு முதல் பெண் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். குடும்பத்தினருடன் செலவழிக்கும் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாக இருக்கும். வணிக ஒப்பந்தங்கள் வெற்றி பெறும். நண்பரின் உதவியால் வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

 

கும்ப ராசியினருக்கு மன உறுதி மற்றும் நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். விநாயகப் பெருமானின் அருளால் வாழ்க்கையில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வேலை முடிவடையும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link