Pkl 2021: புரோ கபடி லீக் சீசன் 8: அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள்
ஏலத்தின் போது, பர்தீப் நர்வால் மற்றும் சித்தார்த் தேசாய் ஆகியோருக்காக கிட்டத்தட்ட அனைத்து அணிகளுக்கும் முட்டி மோதிக் கொண்டிருந்தன. கொண்டிருந்தது. இந்த இரண்டு வீரர்களுக்கும் அணிகள் நிறைய பணம் செலவிட்டன. இந்த சீசனின் ஏலத்தில் ஒரு கோடிக்கு மேல் விலை பெற்ற வீரர்களின் பட்டியலில் இந்த இரண்டு வீரர்களின் பெயர்களும் சேர்ந்துவிட்டன. யூபி யோதா அணி, பிரதீப் நர்வாலை1.65 கோடி ரூபாய்க்கு வாங்கியது, தெலுங்கு டைட்டன்ஸ் 1.30 கோடி ரூபாய்க்கு சித்தார்த் தேசாயை வாங்கியது. (புகைப்பட ஆதாரம்- ட்விட்டர்)
இந்திய கபடி அணியின் கேப்டன் தீபக் நிவாஸ் ஹூடா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியில் சேர்ந்தார். அவரை அணி 55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் அணி ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்காக தீபக் விளையாடுவார். ஆல்-ரவுண்டர் ரோஹித் குலியாவை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 83 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. தங்கப் பதக்கம் வென்ற இந்திய கபடி அணியை வழிநடத்திய தீபக் நிவாஸ் ஹூடா மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளன. (புகைப்பட ஆதாரம்- ட்விட்டர்)
தபாங் டெல்லியின் ரைட் கார்னர் டிஃபெண்டர் ரவீந்தர் பஹால் இந்த சீசனில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடுவார். குஜராத் ஜெயன்ட்ஸ் ரவீந்தரை 74 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. தடுப்பாட்டத்தால் வித்தியாசமான அடையாளத்தை உருவாக்கிய ரவீந்தர், டெல்லி அணிக்காக மறக்கமுடியாத பல போட்டிகளில் விளையாடியுள்ளார். இப்போது அவர் குஜராத்துக்காக தனது திறமையை வெளிப்படுத்துவார். (புகைப்பட ஆதாரம்- ட்விட்டர்)
விஷால் பரத்வாஜ் மற்றும் பல்தேவ் சிங் ஆகியோர் இந்த பருவத்தில் புனேரி பல்தன் அணியில் இணைந்தனர். தலா 60 லட்சம் ரூபாய்க்கு Puneri Paltan அணி இவர்களை ஏலத்தில் எடுத்தது. 4 வது ஆசிய ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற விஷால் பரத்வாஜிடம் அணி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. விஷால் எட்டாம் வகுப்பு முதல் கபடி விளையாடத் தொடங்கினார். இன்று அவர் நாட்டின் சிறந்த கபடி வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். (புகைப்பட ஆதாரம்- ட்விட்டர்)