குரு நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் வரை இந்த ராசிகள் மீது குரு பார்வை.. குபேர யோகம், அமோகமான வாழ்க்கை

Mon, 10 Jul 2023-9:29 am,
Guru Nakshatra Gochar

குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். அவரது ராசி மாற்றமுன் நட்சத்திர மாற்றமும் ஜோதிட ரீதியாக மிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளும் சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

Guru Nakshatra Gochar: Impact on Zodiac Signs

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவதன் விளைவு அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Guru Nakshatra Gochar: Aries

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாட்களில் எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்விலும், குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். 

மிதுனம்: குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த காலத்தில் மிதுன ராசிக்காரர்களின் அனைத்து வகையான விருப்பங்களும் நிறைவேறும். திடீர் பண பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

 

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் முழுமையான மகிழ்ச்சியை அள்ளித் தருவார். அரசு வேலைகளுக்காக தயாராகி வருபவர்களுக்கு இந்த நேரத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு ஏற்படும். முதலீட்டால் லாபம் காணலாம். 

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். துலாம் ராசிக்காரர்கள் நவம்பர் வரை வியாபாரத்தில் பெரும் வெற்றி பெறுவார்கள். இதனுடன் பண பலனும் உண்டாகும். இப்போது துவக்கப்படும் பணிகளில் பரிபூரண வெற்றி பெறுவீர்கள். புதிய வேலைக்கான தேடல் விரைவில் முடிவுக்கு வரும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பரணி நட்சத்திரத்தில் நுழையும் போது பண பலன் கிடைக்கும். இதனுடன் இந்த ராசிக்காரர்கள் உடல் மற்றும் மன உபாதைகளில் இருந்து விடுபடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்விலும் காதல் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய விருந்தினர் வர வாய்ப்பு உள்ளது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link