நவம்பரில் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்

Thu, 26 Oct 2023-3:40 pm,

சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், உலக இன்பம், அன்பு போன்றவற்றுக்கு காரணமான கிரகம் என்று கூறப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் பொருள் ரீதியிலான உலக இன்பங்களுக்கு பஞ்சமிருக்காது. 

சுக்கிரன் பெயர்ச்சியால் 12 ராசிகளில் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களும் சில ராசிகளுக்கு பாதகமான பலன்களும் கிடைக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். 

 

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் பெயர்ச்சி (Venus Transit) இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது. இவர்கள் வாழ்வில் அன்பின் பிரவேசம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவார்கள். குடும்பத்தில் உள்ள அனைவருடனும் மிகவும் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். அன்னை லக்ஷ்மியின் அருளால், உங்களுக்கு அதிக பணம் கிடைக்கும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும்.

கடக ராசி: உங்கள் கடின உழைப்பு பலனளிக்கும், நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். பழைய ஆசையும் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு லாபகரமான வெற்றிகளை கொண்டு வரும். உயர் பதவியை அடைவீர்கள்.  வாழ்க்கை துணையுடன் மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பல வித நன்மைகளைத் தரும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். இது முதலீட்டிற்கு ஏற்ற நேரமாக இருக்கும். முதலீடு செய்து சேமிப்பீர்கள். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் - வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாகவும் இணக்கமாகவும் வாழ்வீர்கள்.

கன்னி ராசி: சுக்கிரன் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை தருவார். சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும், நிலுவையில் உள்ள வேலைகள் தொடங்கும்.சம்பளம் கூடும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வருமானம் பெருகும், மூதாதையர் சொத்துக்களும் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். 

விருச்சிக ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் இது நல்ல நேரமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்தால், நீங்கள் விரைவில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சுமுகமான உறவு இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link