சனி வக்ர பெயர்ச்சி: 7 ராசிகளுக்கு பொற்காலம்..5 ராசிகளுக்கு கஷ்ட காலம்

Mon, 17 Jul 2023-3:38 pm,

மேஷ ராசி செய்யும் தொழில் வளர்ச்சியடையும்.  புது வேலை கிடைக்கும்.  பதவியில் புரமோசன் கிடைக்கும்.  திருமணம் நடைபெறும்.  கவுரவம் அந்தஸ்து உயரும்.  வீண் விரைய செலவு செய்யாமல் தான தர்மங்கள் செய்யுங்கள்.

ரிஷப ராசி பணவரவு அதிகரிக்கும்.  கடன் பிரச்சினைகள் நீங்கும்.  அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள்.  நிறைய தர்மங்களை செய்யுங்கள்.  நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

மிதுன ராசி சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும்.  திடீர் பணவரவு கிடைக்கும்.  கஷ்டமில்லாமல் நவம்பர் வரை கவனமாக கடந்து விடுவீர்கள்

கடக ராசி வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.  விசா கிடைக்கும்.  வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். 

சிம்ம ராசி நோய்கள் தீரும்.  கடன்கள் கட்டுப்படும்.  அசையா சொத்துக்களை வாங்குவீர்கள்.  திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும்.  புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும்.  செல்வமும் செல்வாக்கும் கூடும்.

கன்னி ராசி நல்லது அதிகம் நடக்கும்.  வேலையில் சிரமத்தை சந்திப்பவர்களுக்கு பிரச்சினை நீங்கும். புதிய வேலை கிடைக்கும்.  திருமண தடைகள் நீங்கும்.  வீடு, வாகனம் வாங்குவீர்கள்.  தொழில் வளர்ச்சி பெறும்.

துலாம் ராசி வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.  வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.  பணவரவு அதிகரிக்கும்.  வண்டி வாகனம் வாங்குவீர்கள்.  நோய்களும் வெளிப்படும்.  அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது அவசியம்.

விருச்சிக ராசி நன்மைகள் தேடி வரும். வராத பணம் தேடி வரும்.  முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும்.  துன்பங்கள், துயரங்கள் நீங்கும்.  கொடுத்த கடன்கள் வசூலாகும்.  பயணங்கள் வெற்றியை கொடுக்கும்.  மன நிம்மதி கொடுக்கும்.

தனுசு ராசி நிம்மதி பெருமூச்சு விட்டீர்கள்.  தொழில் வியாபாரத்தில் நல்ல தன வருமானமும் லாபமும் கிடைக்கும். 

மகர ராசி மன அழுத்தம், தடுமாற்றங்களை இருக்கும்.  வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை இருக்கும்.  கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும்.  உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.  தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். 

கும்ப ராசி சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம்.  சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது.  தேவையில்லாத செலவு வரும்.  வங்கி முதலீடு செய்வது நல்லது.  திடீர் பண வரவு வரும் கடன் பிரச்சினைகள் நீங்கும்.

மீன ராசி குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.  மன அழுத்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.  தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும்.  திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  அந்நிய தேசத்து வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link