உடல் பருமன் குறைய... ‘இந்த’ வெள்ளை உணவுகளுக்கு நோ சொல்லுங்க!
)
என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லை என்றால் அதற்கு தவறான உணவு பழக்கமே காரணம். மிக முக்கியமாக சில வெள்ளை உணவுகளை உங்கள் டயட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றினால், உடல் பருமன் வேகமாக குறையும்.
)
மைதா ஊட்டசத்து இல்லாத காப்போஹைட்ரேட் நிறைந்த மாவு. மைதாவால் செய்யப்பட்ட உணவுகளான பரோட்டா, பிரட்டுகள் என அனைத்துமே, நார்ச்சத்து புரதம் எதுவுமே இல்லாதவை. இவை கலோரிகள் அதிகம் கொண்டவை. எனவே இதனை விலக்குவது மிக அவசியம்.
)
உடல் பருமன் குறைய வேண்டும் என்றால் சர்க்கரையை விலக்காமல் சாத்தியமில்லை. சர்க்கரை மிக அதிக கலோரிகளை கொண்டது. எனவே சர்கக்ரை உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக வெல்லம் எடுத்துக் கொள்ளலாம்
எலக்ட்ரோலைட் சீராக இருக்க உப்பு தேவை. எனினும் வெள்ளை உப்பு எடை இழப்பிற்கு உதவாது. வெள்ளை உப்பிற்கு பதிலாக இந்துப்பு பயன்படுத்தலாம். இதில் ஊட்டசத்துக்கள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் ஊட்டசத்து குறைவாக இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இதில் குறைந்த அளவிலான நார்ச்சத்தும் மாவு சத்துமே உள்ளது. இதற்கு பதிலாக சிவப்பரிசி சாப்பிடலாம்.
வெள்ளை பாஸ்தா கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்தது. ம்ேலும் அதில் சேர்க்கப்படும் மைத மற்றூம் சீஸ் உடல் எடையை அதிகரிக்கும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்தது. அதற்கு பதிலாக கோதுமை பாஸ்தா எடுத்துக் கொள்ளலாம்
உடல் எடையை குறைக்க ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த மயோனைஸ்சை ஒதுக்கி வைப்பது சிறந்தது. இது வளர்சிதை மாற்றத்தை பாதித்து உடல் எடை குறைக்கும் முஅய்ற்சியை பாழாக்கிவிடும்.