’பிறந்தநாளில் புதுவாழ்வு’ காதலியை கரம் பிடித்த அக்சர் படேல்..! - Photos

Fri, 21 Jan 2022-10:12 pm,

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான அக்சர் படேல் வியாழக்கிழமை 28வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. அப்போது காதலி மேகாவுக்கு மோதிரம் அணிவித்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார் அக்சர் படேல்.

பிறந்தநாளில் புதுவாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள அவருக்கு ரிஷப் பன்ட், ஆர்.பி.சிங், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அக்சர் படேலின் நிச்சயத்தார்த்த விழாவில் குஜராத் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

காயம் காரணமாக அக்சர் படேல் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. அடுத்தாக இந்தியாவில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.

ஐ.பி.எல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவரை, அந்த அணி சுமார் 9 கோடி ரூபாய்க்கு ரீட்டெய்ன் செய்துள்ளது. ரிஷப் பன்டுக்கு அடுத்தபடியாக அதிக விலைக்கு ரீட்டெய்ன் செய்யப்பட்டுள்ளவர் அக்சர் படேல்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link