அயலான் மற்றும் கேப்டன் மில்லர் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை?
)
தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள ‘அயலான்’ ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.
)
தமிழில் பொங்கல் அன்று வெளியாகும் நிலையில் தெலங்கானா, ஆந்திரவில் இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகவில்லை.
)
சில வாரங்கள் கழித்து தான் அந்த பகுதிகளில் இரண்டு படங்களும் வெளியாகின்றன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு தெலுங்கில் மகேஷ் பாபு, ரவி தேஜா, வெங்கடேஷ் மற்றும் நாகர்ஜுனா ஆகியோரின் படங்கள் வெளியாக உள்ளது. இதனால் அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை.
இந்த காரணத்தால் பொங்கல் முடிந்த பிறகு இந்த இரண்டு படங்களும் வெளியாக உள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பொங்கலுக்கு வெளியாகிறது.