அதிரடியாய் அதிகரிக்கும் உடல் எடையை அசால்டாய் குறைக்கும் ஆயுர்வேத டிப்ஸ்
உடல் எடையை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஆயுர்வேதம் மிக உதவியாக இருக்கின்றது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில ஆயுர்வேத உதவிக்குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மஞ்சளில் பலவித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது பல காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தினமும் மஞ்சள் பால் குடித்து வந்தால் அதிகரித்த உடல் எடை எளிதாக குறைய தொடங்கும்.
நம் உணவின் சுவையை அதிகரிக்க வெந்தயம் பயன்படுத்தப்படுகின்றது. இது மட்டுமின்றி உடல் எடையை குறைப்பதிலும் இது மிகவும் உதவியாக இருக்கும். வெந்தயத்தின் பண்புகள் நம் செரிமான அமைப்பை சீராக்குகின்றன. இதில் உள்ள தனிமம் பசியை குறைக்கிறது. இதனால் வயிற்றில் எப்பொழுதும் நிரம்பிய உணர்வு இருக்கின்றது.
விஜய்சார் எனப்படும் வேங்கை மரப்பட்டை உடல் பருமனை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் கொழுப்பை குறைக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன. இதில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும். இதன் மூலம் செரிமான அமைப்பையும் சீராக வைத்திருக்க முடியும்.
குக்குலு ஆயுர்வேத மருத்துவத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை ஆகும். இதில் உள்ள பண்புகள் உடலில் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடை குறைக்க உதவுகின்றது.
இலவங்கப்பட்டை உடலின் வளர்ச்சியை மாற்றத்தை துரிதப்படுத்தி, தொப்பை கொழுப்பை குறைத்து, கலோரிகளை எரித்து அதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தேநீர் குடித்து வந்தால் சில நாட்களில் பலன் தெரியும்
திரிபலா நீண்ட நாட்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பொடியாகும். இது கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூலிகைகளின் கலவையால் உருவாக்கப்படுகிறது. திரிபலா உடலில் உள்ள நச்சுக்களை அகற்றவும் செரிமான அன்பை சீராக்கவும், உடல் எடை வேகமாக குறைக்கவும் உதவுகின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.