பேபி சாரா முதல் நடிகை சாரா வரை! கியூட்டான புகைப்படங்கள்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் நடிகை சாரா அர்ஜுன் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
'பொன்னியின் செல்வன்-2' படத்தில் சாரா அர்ஜுன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களின் நெஞ்சங்களை விட்டு நீங்காமல் நிலைத்து நிற்கிறது.
விக்ரம் நடிப்பில் தமிழில் வெளியான 'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமுக்கு மகளாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியதன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் சாரா அர்ஜுன் என்ட்ரி ஆனார்.
'தெய்வ திருமகள்' படத்தை தொடர்ந்து பேபி சாரா தமிழில் சைவம், விழித்திரு போன்ற படங்களில் நடித்திருந்தார். 'சைவம்' படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.
சாரா அர்ஜுன் தமிழ் படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்கள் பலவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.