சுக்கிரன் ராசி மாற்றம்: இந்த ராசிகளுக்கு நேரம் சரியில்லை, ஜாக்கிரதை!!
கடக ராசியில் சுக்கிரன் செல்வதால் மேஷ ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சற்று மாறலாம். இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். சிறிய விஷயங்கள் அவர்களை தொந்தரவு செய்யலாம். இந்த நேரத்தில் உங்கள் காதலன் / காதலியுடனான உறவில் சில சிக்கல்கள் வரக்கூடும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும், ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி ராசிக்காரர்கள் சுக்கிரனின் சஞ்சாரத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், பண விஷயத்தில் எந்த ஆபத்தான முடிவுகளையும் எடுக்க வேண்டாம். நீங்கள் பணத்தை முதலீடு செய்வதில் உறுதியாக இருந்தால், நன்றாக யோசித்து, தீர விசாரித்த பிறகே முதலீடு செய்யுங்கள். முடிந்தால், தற்போதைக்கு முதலீடு செய்வதைத் தவிர்க்கவும், அது உங்களுக்கு நல்லது. இந்த கலாத்தில் உடல் நலத்தில் அலட்சியம் காட்டாமல், ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
கடக ராசியில் சுக்கிரன் நுழைவதால், துலாம் ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை சற்று சிரமமாக இருக்கும். எனவே, இந்த நேரத்தில் உங்கள் பெரியவர்களின் அறிவுரைகளை புறக்கணிக்காதீர்கள். மேலும், இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் சில நல்ல நிகழ்வுகளை வீட்டில் ஏற்பாடு செய்ய முயற்சி செய்யுங்கள். தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்களுக்கும் இந்த காலகட்டத்தில் பல சவால்கள் வரலாம். ஆரோக்கியத்தில் நீங்கள் காட்டும் அலட்சியம் உங்களை பாதிக்கலாம். எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
கடக ராசியில் சுக்கிரன் நுழைவதால் தனுசு ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கடும் போட்டியை சந்திக்க நேரிடும். மேலும், இந்த காலகட்டத்தில் யாரிடமும் கடன் வாங்க வேண்டாம், இல்லையெனில் உங்கள் சிரமங்கள் அதிகரிக்கலாம். இது மட்டுமின்றி, சில சமயங்களில் பண இழப்பு பிரச்சனையையும் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும். இந்த காலத்தில் மாணவர்கள் இடையூறுகளையும் சந்திக்க நேரிடும்.
கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் செலவுகளும் அதிகரிக்கலாம். எனவே தேவையற்ற செலவுகளை முடிந்தவரை கட்டுப்படுத்துங்கள். திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடனான உறவில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)