மயக்கும் மகிமாவின் மாஸான புகைப்படங்கள்

Thu, 02 Mar 2023-4:31 pm,

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மகிமா நம்பியார் 2014 ஆம் ஆண்டு இளங்கலை ஆங்கிலத்தில் பட்டம் முடித்துள்ளார்.

நடனம் மற்றும் பாடல் கற்றுக் கொண்ட அவருக்கு இயல்பாகவே திரைப்படத் துறையில் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது

படித்துக் கொண்டிருக்கும்போதே, அதாவது 15வது வயதில் காரியஸ்தன் மலையாள திரைப்படத்தில் நடித்தார். அமலாபால் நடித்த சிந்து சமவெளி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்.

பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக அப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார். சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை திரைப்படத்தில் அறிவழகி கதாப்பாத்திரத்தில் நடித்தார்

அந்தப் படம் தமிழ் திரையுலகில் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இந்தப் படத்துக்கு பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இரவுக் ஆயிரம் கண்கள், அண்ணணுக்கு ஜே படங்களில் நடித்த மகிமா நம்பியார், வெயிட்டான கதாப்பாத்திரம் கிடைக்க வேண்டும் என முயற்சித்து வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link