கோடைகாலத்தில் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் மோர்!
குளிர்காலம் முழுவதும் முடிவடைந்து, கோடைகாலம் தொடங்கப்படவுள்ள நிலையில் அன்றாடம் மத்திய உணவின் போது அனைவரும் மோர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மோர் எளிதில் ஜீரண சக்தியை அளிப்பதால் உடலில் தேவையற்ற கழிவுகள் தங்குவது தடுக்கப்பட்டு உடல் ஆரோக்கியமாய் இருக்கும்.
ஆயுர்வேதத்தில் மோர் அமிர்தமாக கருதப்படுகிறது. இதனை சாப்பிடுவதால் கபம் மற்றும் வாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.
செரிமான கோளாறுகள், பசியினமை, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவற்றை சரிப்படுத்த மோர் சிறந்த பானம் என ஆயுர்வேதம் கூறுகிறது.