காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா?
காலை நேரத்தில் அதுவும் குறிப்பாக வெளிப்புறத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்களுக்கு அதிக ஆற்றலை தந்து அந்த நாளை உற்சாகமான நாளாக மாற்றிவிடும்.
காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்யும்பொழுது உங்களுடைய மன அழுத்தம், சோர்வு, பயம் போன்றவை நீங்கி உங்கள் மனநிலை நன்றாக இருக்கும்.
காலையில் சீக்கிரமாக எழுந்து நன்கு சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும்பொழுது உங்களது கால் தசைகள் வலுப்படும்.
சமீபத்திய ஆய்வுப்படி அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் பெரியவர்களின் அறிவாற்றல் மேம்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காலையில் நடைபயிற்சி செய்வது, நாள் முழுவதும் ஆரோக்கியமான மதிய உணவு மற்றும் தின்பண்டங்களைத் தேர்ந்தெடுக்க உங்களை ஊக்குவிக்கும்.