தினமும் சீரகம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
சீரகத்தை பற்றி நாம் சிறு வயதிலிருந்தே கேட்ட ஒன்று இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தும் என்பது, இது உண்மை தான். தினமும் சீரகம் சாப்பிடுவது உணவை ஜீரணமடைய செய்கிறது, செரிமான திறன் மேம்படுகிறது.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் சீரகம் உதவுகிறது, தொடர்ந்து 8 வாரங்கள் இருவேளை வீதம் சீரகம் சாப்பிட்டு வர உங்கள் ரத்தத்திலிருந்து நச்சுக்கள் வெளியேறி ரத்தம் இயற்கையாக சுத்திகரிக்கப்படும்.
உடல் எடை குறைப்பில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது, இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சீரகம் சாப்பிடாத பெண்களை விட சீரகம் சாப்பிடும் பெண்களிடம் உடல் எடை குறைப்பு அதிகமாக நிகழ்வதாக தெரியவந்துள்ளது.
சீரகத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளது, இதனை தினம் சாப்பிடுவதன் மூலம் உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. சீரகத்தில் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி பொருட்கள் நிறைந்துள்ளதால், இது உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது மற்றும் உடலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை சரிசெய்கிறது.