மூளை ஆரோக்கியம் முதல் நீரிழிவு வரை... வியக்க வைக்கும் கொய்யா..!
மூளை ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிக்க தேவையான அனைத்து வைட்டமின்களும் கொய்யாவில் காணப்படுகின்றன. அவற்றில் உள்ள வைட்டமின் பி3 மற்றும் வைட்டமின் பி6, மூளைக்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி நரம்புகளை தளர்த்துகிறது.
கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி என்பது இயற்கையான ஆண்டிஹிஸ்டமைன். இது அழற்சி செயல்பாட்டின் போது வெளியிடப்படும் ஹிஸ்டமின்கள் எனப்படும் மூலக்கூறுகளின் அளவைக் குறைப்பதன் மூலம் சுவாச ஒவ்வாமைகளைக் கட்டுப்படுத்துகிறது.
கொய்யாப்பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது நரம்புகள் மற்றும் தசைகளை தளர்த்த உதவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுபவர்களுக்கும், கொய்யா மிகவும் நல்லது.
தைராய்டு ஹார்மோன் அளவை மேம்படுத்தும் தாமிர சத்து கொய்யாவில் உள்ளது. இதனால், தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்பட உதவுகிறது. தாமிரம் ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலுக்குத் தேவையான முக்கியமான கனிமம்.
கொய்யாப்பழத்தில் ஃபோலிக் அமிலம் அல்லது வைட்டமின் பி-9 நிறைந்துள்ளது. இது குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளை நரம்பியல் கோளாறுகளிலிருந்து பாதுகாக்க இதனை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொய்யாவில் உள்ள லைகோபீன் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உயிரணுக்களுக்கு ஏற்படும் நேரடி சேதத்தைத் தடுக்கிறது. இதனால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறது
கொய்யா நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த பழம். முதலாவதாக, இது நார்ச்சத்து நிறைந்தது, இரண்டாவதாக, இது மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த இந்த இரண்டு பண்புகளும் அவசியம் தேவை.
கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும சுருக்கங்களை நீக்கி இளமையாக இருக்க உதவுகிறது. முதுமை என்பது தவிர்க்க முடியாதது தான். ஆனால், தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதன், முதுமை எளிதில் அண்டாமல் ஒத்தி போடலாம்.
உணவில் நார்ச்சத்து இல்லாததால் தான் மலச்சிக்கல் ஏற்படுகிறது. நார்ச்சத்து பெருங்குடலை சுத்தம் செய்து, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் கொய்யாவும் ஒன்று.