தூங்கி எழுந்ததுமே தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? எவ்வளவு குடித்தால் பிரச்சனை?
ஆரோக்கியத்தை பராமரிக்க, காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் நீர் அருந்துவது நன்மையைக் கொடுக்கும். அதுவும் குறைந்தது 650 மில்லி தண்ணீரைப் பருக வேண்டும். காலையில் பல் துலக்குவதற்கு முன் ஒரு லிட்டர் தண்ணீரைப் பருகினால் ஆரோக்கியம் மேம்படும்
காலையில் நீர் அருந்துவது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்பதுடன், தண்ணீரின் வெப்பம் செரிமான அமைப்பைத் தூண்டி, காலைக்கடன்களை இயல்பாக மாற்றி வெளியேற்றும், இதனால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது
அதிகாலையில் நீர் பருகுவது என்பது, ஊட்டச்சத்துக்களை சிறந்த முறையில் உறிஞ்வதற்கு உடலுக்கு உதவும்
இரவு உணவுக்கு பின் நீண்ட நேரம் வயிறு காலியாக இருந்தபிறகு, வேறு எதையும் உண்பதற்கு முன்பு, நீர் அருந்துவது என்பது, உடலின் இயக்கத்தை சீர்படுத்த உடல் உறுப்புகளுக்கு உதவியாக இருக்கும். இதனால், உடலின் வளர்சிதை மாற்றம் மேம்படும்
சுவாசம், வியர்வை மற்றும் பிற உடலியல் செயல்முறைகளின் விளைவாக இரவில் உடல் இழக்கும் நீர்ச்சத்தை ஈடுகட்ட, அதிகாலையில் நீர் அருந்துவது உதவும். இதன் மூலம், நீரிழப்பு தவிர்க்கப்படுகிறது
காலையில் தண்ணீர் குடிப்பது அறிவாற்றல் செயல்திறனுக்கு உதவுகிறது. ஏனென்றால், மனத் தெளிவு, கவனம் மற்றும் செறிவு ஆகியவற்றை மேம்படுத்த உடலில் நீர்ச்சத்து அவசியம் தேவை
பளபளப்பான, ஆரோக்கியமான சருமத்தை பெறவேண்டும் என விரும்பினால், காலையில் எழுந்தவுடன் குறைந்தது 3 டம்ளர் நீர் பருகுங்கள்
உடலின் நிணநீர் சுழற்சியை ஊக்குவிக்க்கவும், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் காலையில் நீர் பருகுவது அவசியம் ஆகும்
பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.