2024இல் பட்ஜெட் விலையில் கலக்கிய இந்திய 5 ஸ்மார்ட்போன்கள்! - கம்மி விலையில் ஜம்முனு இருக்கும்!
தரமான டிசைன்கள், நிறைவான அம்சங்கள், அதுவும் குறைவான விலையில் என இந்தாண்டு இந்திய சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்தின.
சாம்சங் தொடங்கிய லேட்டஸ்ட் டிரெண்டில் உள்ள CMF வரை பல்வேறு ஸ்மார்ட்போன்களை இதில் குறிப்பிடலாம். அந்த வகையில், இந்த 2024ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் ஹிட் அடித்த டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.
ஒவ்வொருவருக்கும் ஒரு பட்ஜெட் இருக்கும் என்றாலும், ஒரே வகையான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஒப்பீடு அதில் எது பட்ஜெட் விலையில் வழங்கப்படுகிறது என்பதை கணக்கிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
Lava Blaze Duo: இரண்டு டிஸ்பிளேவுடன் வெறும் ரூ.18,999 என்ற விலையில் வந்த இந்த மாடல் நிச்சயம் கவனிக்கத்தக்க பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.
CMF Phone 1: தனித்துவமான டிசைனில் வரும் ஸ்மார்ட்போன் 50MP பின்பக்க இரு கேமரா அமைப்பும், 16MP முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. இதில் 5000mAh பேட்டரி உள்ளது. இதன் விலை ரூ.14,999 ஆகும்.
Samsung Galaxy M15 5G Prime Edition: இதன் டிசைன் கவர்ச்சிக்கரமாக இல்லாவிட்டாலும் 5 வருட OS உத்தரவாதத்துடனும் 6,000mAh பேட்டரியும் AMOLED டிஸ்பிளே மற்றும் மூன்று கேமரா அமைப்பு என இத்தனை அம்சங்களுடன் வந்த இந்த மாடல் வெறும் ரூ.11,999 தான்.
HMD Fusion: இதுவும் வித்தியாசமான டிசைனில் பின்பக்கம் 108 MP+ 2 MP இரண்டு கேமரா அமைப்பு உடனும், 50MP பின்பக்க கேமரா அமைப்பு உடனும் வருகிறது. இதன் விலை ரூ.17,999 ஆகும். இந்த அம்சங்கள் இவ்வளவு குறைவான விலையில் தரமாக கிடைப்பது அரிதாகும்.
Redmi 4A: வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நல்ல அம்சங்களை கொடுத்த ஸ்மார்ட்போன் இது எனலாம். வெறும் 8,499 ரூபாயில் 5ஜி ஸ்மார்ட்போனாக இது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.