Business Ideas: பெண்களும் தொழிலதிபர் ஆகலாம், அரசு திட்டம் மூலம் அட்டகாச உதவிகள்

Tue, 15 Jun 2021-8:56 pm,

இந்தத் திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கிறது. இதில் 3 வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. அவை ஷிஷு, கிஷோர் மற்றும் தருண் கடன்கள் ஆகியவையாகும். ஷிஷு கடனில், ரூ .50,000 வரை கடன் கிடைக்கிறது. கிஷோர் வகையில் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாயும், தருண் வகையில் 5 முதல் 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த திட்டத்தில் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினால், கடனை எடுக்கும்போது உங்கள் வீட்டில் உள்ள பெண்களின் பெயரில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில், பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் பல திட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், பெண்ணோ அல்லது ஆணோ யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். கடன் வாங்க, நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கியின் கிளைக்குச் செல்ல வேண்டும். அங்கு சென்று கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான அனைத்து தகவல்களையும் வங்கியில் பெற முடியும். 

 

தொழிலைத் தொடங்கும் நபரின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இதை விட குறைவான வயதுடைவோர் கடன் வாங்க முடியாது. முக்கியமாக இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் பயனாளிகள் விற்பனையாளர்கள், வர்த்தகர்கள், கடைக்காரர்கள் மற்றும் வேறு சில சிறு வணிகர்களாக இருப்பார்கள்.

 

நீங்கள் நாட்டின் அனைத்து அரசு வங்கிகளிடமிருந்தும் கடன் பெறலாம். இது தவிர, தனியார் துறையின் ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, சிட்டி யூனியன் வங்கி, டி.சி.பி வங்கி, ஃபெடரல் வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, ஜம்மு-காஷ்மீர் வங்கி, கர்நாடகா வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கோட்டக் மஹிந்திரா, நைனிடால் வங்கி, சவுத் இண்டியன், யெஸ் பேங், ஐ.டி.எஃப்.சி வங்கி ஆகிய வங்கிகளிலும் கடன் பெறலாம். மேலும், நீங்கள் கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்களிடமிருந்து முத்ரா கடனை எடுக்கலாம்.

கடன் வாங்க, நீங்கள் அதிகாரப்பூர்வ தளமான www.mudra.org.in ஐப் பார்வையிட வேண்டும். இந்த இணையதளத்தில் முத்ரா கடனுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். முத்ரா திட்டத்தின் கீழ் நீங்கள் கடன் பெற முடியுமா முடியாதா என்பது பற்றிய அனைத்து விவரங்களும் https://merisarkarmeredwar.in/ இல் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்பைக் கிளிக் செய்து, முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வாங்க நீங்கள் தகுதியுள்ளவரா இல்லையா என்பதை அறிய முடியும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link