உங்கள் பட்ஜெட்டில் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: விலை, பிற விவரம் இதோ
நாட்டின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறந்த தேர்வாகும். இந்த ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 கிமீ பயணத்தை நிறைவு செய்கிறது. ஸ்கூட்டரின் பேட்டரி 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். 60 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 25 சதவீதம் வரை சார்ஜ் ஆகும். நிறுவனம் ஸ்கூட்டருக்கு 70,000 கிமீ அல்லது ஏழு ஆண்டுகள் உத்தரவாதத்தை வழங்குகிறது, பேட்டரி 50,000 கிமீ அல்லது 3 ஆண்டுகள் உத்தரவாதத்தைப் பெறுகிறது.
ஏதர் எனர்ஜி இ-ஸ்கூட்டர் ஏதர் 450 இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இதன் Ather 450 Plus இன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,31,647. இரண்டாவது வேரியன்ட் Ather 450X இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,50,657. இ-ஸ்கூட்டர் ஏத்தர் 450 பிளஸ் முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ வரை பயணிக்கும். ஏத்தர் 450 எக்ஸ் வகை 85 கிமீ வரை பயணிக்கும். இரண்டு வகைகளிலும், ஸ்கூட்டரின் மோட்டார் முறையே 5.4 kw மற்றும் 6kw பவரை அளிக்கிறது, 22Nm மற்றும் 28Nm இன் உச்ச முறுக்குவிசையை உருவாக்குகிறது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான கோமாகி கடந்த மாதம்தான் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியின் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1,15,000 ஆகும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 180-220 கிமீ வரை பயணிக்கும். நிறுவனத்தின் டீலர்ஷிப்பிற்குச் சென்றால் இந்த ஸ்கூட்டரை நேரடியாகப் பார்க்கலாம்.
Okinawa OKHI-90 இ-ஸ்கூட்டரின் விலை ஃபேம் டூ மானியத்திற்குப் பிறகு விலை ரூ.1,21,866 ஆகும். ஃபேம் டூ மற்றும் மாநில மானியத்திற்குப் பிறகு, டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1,03,866 ஆகும். இது வெறும் 10 வினாடிகளில் மணிக்கு 90 கிமீ வேகத்தை எட்டும்.
TVS மோட்டார்ஸின் இ-ஸ்கூட்டரான TVS iQUBE ஒரு சிறந்த தேர்வாகும். இந்த ஸ்கூட்டரின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,07,938 ஆகும். இந்த ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ வரை பயணிக்கும். இந்த ஸ்கூட்டர் சுமார் 7 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிமீ ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 4.4 கிலோவாட் ஆற்றலை உருவாக்குகிறது.