அடம் பிடிக்கும் கொலஸ்ட்ராலை அடக்கி வைக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்
சில எளிய இயற்கையான உணவுகளை உட்கொண்டு உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க முடியும். இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உணவில் முழு தானியங்களையும் சேர்த்துக்கொள்வது, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது இதய நோய் அபாயத்தை குறைத்து, எடையை குறைக்கவும் உதவுகின்றது. இது எல்டிஎல் கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது. முழு தானியங்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.
தினசரி உணவில் பாதாமை சேர்த்துக்கொள்வது எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு, இதயத்தை சேதப்படுத்தும் வீக்கத்தையும் குறைக்கிறது. பாதாம் சாப்பிடுவது எஸ்டிஎல் கொழுப்பை மேம்படுத்துகிறது. இதன் மூலம் தொப்பை கொழுப்பை குறைக்க முடியும்.
நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி கட்டுப்பாட்டில் வைத்திருக்க இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த இஞ்சி ஒரு சிறந்த வழியாக உள்ளது. இஞ்சியை பச்சையாக உட்கொள்வது பல வழிகளில் நன்மை பயக்கும். ஒரு சிறிய துண்டு இஞ்சியை தண்ணீருடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
பச்சை மஞ்சள் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளன. அதனால்தான் மருந்துகள் முதல் அழகு சாதனப் பொருட்கள் வரை அனைத்திலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.
வெங்காயத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நரம்புகளை சுத்தம் செய்யும். ஆகையால், கொலஸ்ட்ரால் நோயாளிகள் தினமும் வெங்காயத்தை உட்கொள்ளலாம். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாக கருதப்படுகின்றது.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க, புதினா சட்னியை உட்கொள்ளலாம். இது வயிறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.
பூண்டு உடல் ஆரோக்கியத்தின் ஒரு சஞ்சீவியாக பார்க்கப்படுகின்றது. பூண்டில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை பூண்டை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.