மூத்த குடிமக்களே.... HDFC வங்கி வழங்கும் சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க..!!
பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூத்த குடிக்களுக்கான பல சிறப்பு திட்டங்களை வழங்குகின்றன. அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசை வழங்கியுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான வங்கி சிறப்பு நிலையான வைப்புத் தொகை திட்டமான HDFC வங்கியின் சீனியர் சிட்டிஸன் கேர் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் ஜனவரி 10, 2024 வரை HDFC சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டியில் (HDFC Bank Senior Citizen Care FD) முதலீடு செய்யலாம்.
எச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதத்தோடு 0.25 சதவீத கூடுதல் வட்டி அளிக்கிறது. அதாவது, மூத்த குடிமக்களுக்கு வங்கி 0.75 சதவீதம் கூடுதல் வட்டி அளிக்கிறது.
மூத்த குடிமக்கள் கேர் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி 10 ஜனவரி 2024 ஆகும். HDFC வங்கி சாதாரண FD யில் மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 7.75% வரை வட்டி வழங்குகிறது.
HDFC வங்கியில் ரூ.2 கோடிக்கும் குறைவான FD மீதான வட்டி விகிதங்களை பொறுத்தவரை, 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதலீட்டு காலத்திற்கு பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம் என்ற அளவில் வட்டி வழங்கப்படுகிறது
2 ஆண்டுகள் 11 மாதங்கள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரையிலான முதலீட்டு காலதிற்கான எஃப்டி முதலீடுகளுக்கு, பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம் என்ற அளவில் வட்டி வழங்கப்படுகிறது
பொறுப்பு துறப்பு: எந்த ஒரு முதலீடு தொடர்பான முடிவையும் எடுக்கும் முன், நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று, உங்கள் தேவைக்கு ஏற்ற வகையில் முதலீடுகளை திட்டமிட்டுவது சிறந்தது.