ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர்களில் நிகழ்த்தப்பட்ட பேட்டிங் சாதனைகள்
இன்று மட்டுமல்ல, என்றென்றும் மறக்கமுடியாத சில சிறந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தருணங்கள் இவை...
2015 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் எடுத்ததற்காக டி வில்லியர்ஸ் என்றென்றும் நினைவில் இருப்பார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த சாதனையைப் படைத்தார் ஏபி டி வில்லியர்ஸ். (பட ஆதாரம்: ட்விட்டர்)
இலங்கைக்கு எதிரான 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், கௌதம் கம்பீரின் முக்கியமான 97 ரன், போட்டி வரலாற்றில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஆட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா -பாகிஸ்தான் இடையிலான 2019 உலகக் கோப்பை போட்டியில் ரோஹித் ஷர்மா140 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்டில், 2015 ODI உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, ஆட்டமிழக்காமல் 237 ரன்கள் எடுத்தார், இது போட்டியின் வரலாற்றில் இன்றுவரை அதிக தனிநபர் ஸ்கோராக உள்ளது. (பட ஆதாரம்: ட்விட்டர்)
அயர்லாந்து கிரிக்கெட்டர் கெவின் ஓ பிரையன், 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை நாக் அவுட் செய்ய 113* ரன்களை அடித்து ரசிகர்களை பரவத்துக்குள்ளாக்கினார். உலகக் கோப்பை வரலாற்றில் இது மிகவும் பெரிய சாதனையாக இன்றும் கருதப்படுகிறது. (பட ஆதாரம்: ட்விட்டர்)
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு வீரர் தனது அணிக்காக அடித்து விளையாடிய சிறந்த தருணங்கள் என்றால், அதில் கபில் தேவின் இந்த ஆட்டம் மறக்க முடியாதது. சிறந்த கேப்டனின் பெஸ்ட் மோமெண்ட்ஸ் என்று இந்த போட்டி அடிக்கடி குறிக்கப்படுகிறது. கபில்தேவ் 1983 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன்கள் எடுத்தார். (பட ஆதாரம்: ட்விட்டர்)
ஆடம் கில்கிறிஸ்ட்: கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் நம்பமுடியாத விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர்களில் ஒருவராக கருதப்படும் ஆடம் கில்கிறிஸ்ட், 2007 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆடம் 104 பந்துகளில் 149 ரன்கள் எடுத்தார். (பட ஆதாரம்: ட்விட்டர்)