LIC Policy: பாதுகாப்புடன் சேமிப்பையும் அள்ளித்தரும் அற்புதமான பாலிசி, விவரம் இதோ

Tue, 05 Oct 2021-6:39 pm,

இந்த சிறப்பு திட்டத்தில், பாதுகாப்போடு, சேமிப்புகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன. பாலிசிதாரர் இறந்தால், இந்த திட்டத்தின் கீழ், அவருடைய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைக்கும். மறுபுறம், பாலிசி முடிவடையும் வரை பாலிசிதாரர் உயிருடன் இருந்தால், முதிர்வுக்குப் பிறகு, பாலிசிதாரர் மொத்த தொகையைப் பெறுவார்.

இந்தக் பாலிசியின் கீழ், நீங்கள் ஒரே நேரத்தில் பிரீமியத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது 5 வருடங்களுக்கு வரையறுக்கப்பட்ட காலத்திலும் பிரீமியம் செலுத்தலாம். இந்த திட்டத்தின் கீழ், நீங்கள் ஆண்டுதோறும், அரையாண்டு, காலாண்டு அல்லது மாதத்திற்கு பிரீமியம் செலுத்தலாம்.

 

இந்த பாலிசியின் கீழ், வாடிக்கையாளர்கள் பிரீமியம் செலுத்துவதில் 30 நாட்கள் சலுகை காலத்தையும் பெறுகிறார்கள். இருப்பினும், சலுகைக் காலத்திலும் நீங்கள் பிரீமியம் செலுத்தவில்லை என்றால், உங்கள் பாலிசி அப்போதே முடிக்கப்படும். இந்த சூழ்நிலையில், பாலிசியின் பலனையும் நீங்கள் பெற முடியாது.

 

இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் கடன் பெறும் வசதியையும் பெறுகிறார்கள். சிங்கிள் பிரீமியம் விருப்பத்தேர்வில் 3 மாத பாலிசி முடிந்தபிறகு அல்லது ஃப்ரீ லுக் காலம் முடிந்த பிறகு கடன் பெறலாம். மறுபுறம், வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் விருப்பத்தில், குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்திய பிறகு கடன் கிடைக்கும்.

 

இந்த பாலிசியில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் பணம் செலுத்தலாம். நீங்கள் இந்த பாலிசியில் www.licindia.in மூலம் முதலீடு செய்யலாம். இது தவிர, வருமான வரி பிரிவு 80 சி -யின் கீழ் இதற்கு விலக்கு பெறலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்ச காப்பீடு தொகை 1 லட்சம் ஆகும். அதிகபட்ச வரம்பு இல்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link