பைக் வாங்குபவர்களின் கவனத்திற்கு: இந்தியாவின் டாப் பைக்குகள் இதோ

Fri, 19 Nov 2021-2:24 pm,

சிறந்த மைலேஜ் பற்றி பேசினால், டிவிஎஸ்ஸின் டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் (TVS Sports) பைக் இதில் முதலிடத்தில் உள்ளது. இந்த பைக்கில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 95 கிமீ மைலேஜ் கிடைக்கும். இருப்பினும், இந்த வாகனம் பழையதாக ஆக மைலேஜ் பாதிக்கப்படலாம். இந்த பைக்கில் 99.7 இன்ஜின் உள்ளது.

குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் பைக்கை வாங்க விரும்பினால், பஜாஜின் இந்த பைக் சிறந்த தேர்வாக இருக்கும். இது CT100 இன் பிரீமியம் பதிப்பாகும். இதில், 1 லிட்டர் பெட்ரோலுக்கு 90 கிமீ மைலேஜ் கிடைக்கும்.

Bajaj CT 100 பைக் பஜாஜின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாகும். இது 99.27 இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த பைக் 1 லிட்டர் பெட்ரோலில் 90 கிமீ வரை மைலேஜ் தரும்.

நீங்கள் Hero மோட்டார்ஸின் ரசிகராக இருந்து உங்கள் பைக்கில் அதிக மைலேஜ் பெற விரும்பினால், Hero's Hero HF Deluxe உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பைக் 1 லிட்டர் பெட்ரோலில் 83 கிமீ மைலேஜ் தரும்.

 

இந்த Hero பைக்கும் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாகும். இதில் 97.2 சிசி இன்ஜின் உள்ளது. இந்த பைக் 1 லிட்டர் பெட்ரோலில் 90 முதல் 100 கிமீ வரை மைலேஜ் தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீங்கள் பிராண்டிற்கு அப்பால் சென்று மைலேஜுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க விரும்பினால், மஹிந்திரா செஞ்சுரோவும் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பைக்கில், 1 லிட்டர் பெட்ரோலுக்கு 85.2 கிமீ மைலேஜ் கிடைக்கும்.

TVS Star City Plus என்ற இந்த டிவிஎஸ் மாடல் மைலேஜிலும் சிறப்பானது. இந்த பைக் 1 லிட்டர் பெட்ரோலில் 86 கிமீ வரை மைலேஜ் தருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link