Best Mileage Bikes: சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் தொகுப்பு
TVS Sport: பல ஆண்டுகளாக கெத்து காட்டி வரும் டிவிஎஸ் ஸ்போர்ட் அதன் சிறந்த தோற்றம், சிறந்த மைலேஜ் மற்றும் மலிவு விலைக்கு பிரசித்தியானது. இது அதன் பிரிவில் மிகவும் ஸ்டைலான தோற்றமுடைய பைக் ஆகும். இந்த பைக் 95 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது. டிவிஎஸ் ஸ்போர்ட் இன்ஜின் 109.7 சிசி ஆகும். டெல்லியில் டிவிஎஸ் ஸ்போர்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 57,330 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
Bajaj Platina: பஜாஜின் 2 சக்கர வாகனங்களில் அதிகம் விற்பனையாகும் பைக் பிளாட்டினா ஆகும். இது 100CC இன்ஜின் பைக் ஆகும். மேலும் இது 8.6 Nm டார்க்கை உருவாக்குகிறது. பிளாட்டினா ஒரு சிறந்த எரிபொருள் மற்றும் காற்று கலவையை உருவாக்கும் DTS-i ட்வின் ஸ்பார்க் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலில், இந்த பைக் 90 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. டெல்லி எக்ஸ்-ஷோரூமில் பிளாட்டினா விலை ரூ .56,480.
Bajaj CT 100: பிளாட்டினாவைத் தவிர, பஜாஜ் சிடி 100 மைலேஜ் அடிப்படையில் ஒரு சிறந்த பைக் ஆகும். இதன் சிறப்பம்சம் குறைந்த விலை மற்றும் சிறந்த மைலேஜ் ஆகும். இந்த பைக்கில் ஒற்றை சிலிண்டர், காற்று குளிரூட்டப்பட்ட 99.27 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது 8.08 பிஎச்பி பவரையும் 8.05 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலில் 89 கிமீ மைலேஜ் தரும். பஜாஜ் சிடி 100 இன் ஆரம்ப விலை ரூ .52,832.
Hero Splendor Plus: மைலேஜ் அடிப்படையில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் (Hero Splendor Plus) இரண்டாவதாக உள்ளது. இந்த 100CC இன்ஜின் பைக் 8 bhp மற்றும் 8Nm உச்ச முறுக்குவிசை உருவாக்குகிறது. இந்த பைக் 81kmpl மைலேஜ் கொடுக்கும் திறன் கொண்டது. ஸ்ப்ளெண்டர் பிளஸின் ஆரம்ப விலை ரூ .63,750.
Hero HF Deluxe: ஹீரோ மோட்டோகார்பில் இருந்து ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் நுழைவு நிலை பிரிவில் மிகவும் பிரபலமான பைக் ஆகும். இந்த பைக் 83 கிமீ மைலேஜ் தருகிறது. சிறந்த மைலேஜுடன் அதன் குறைந்த விலையும் அதை மேலும் சிறப்பாக்குகிறது. இது 97.2 சிசி எஞ்சின் கொண்டுள்ளது. டெல்லியில் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் விலை ரூ .51,900 முதல் தொடங்குகிறது.