உடலில் யூரிக் ஆசிட் பிரச்சனையா? அப்போ இந்த 7 காலை உணவுகள் சாப்பிடுங்க
ஆப்பிள் வினிகர் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனவே அதிக அளவு யூரிக் அமில அளவு உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் யூரிக் அமிலம் குறையத் தொடங்கும்.
மெக்னீசியம் நிறைந்த உணவுகளை அதாவது பாதாம், முந்திரி, கீரை உணவுகளை சாப்பிட்டு வந்தால் கீல்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவும்.
யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுவது நல்ல தீர்வைத் தரும்.
இஞ்சி தேநீர் குடிப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும். அதுவும் தொடர்ந்து தினமும் குடித்து வந்தால் முன்னேற்றத்தைக் காணலாம்.
கொத்தமல்லி, பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளதால், இவை கீல்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவும்.
சீமைக்காட்டு முள்ளங்கியில் தேநீர் செய்து குடித்து வந்தால் உடலில் இருந்து யூரிக் அமில அளவைக் குறைக்கலாம்.
செம்பருத்தி தேநீர் யூரிக் அமிலத்தை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.