வேகமா எடை குறைய இரவில் இதை பண்ணுங்க போதும்: குட் நைட் டிப்ஸ்!!

Fri, 17 May 2024-4:07 pm,

எடை இழப்பு முயற்சியில் நமது இரவு உணவும் இரவில் நாம் பின்பற்றும் பழக்கங்களும் மிக முக்கியமாகும். உடல் எடையை குறைக்க நாம் இரவில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இரவு நேரத்தில் குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம். போதுமான அளவு தூக்கம் இல்லாதவர்கள் உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள் என ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. போதுமான அளவு தடை இல்லாத உறக்கம் எடை இழப்புக்கு அவசியமாகும். 

அதிக சர்க்கரை: இரவு உணவில் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது தூக்கத்தை சீர்குலைத்து பசியை தூண்டும். ஆகையால் இரவில் இனிப்புகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

லேசான இரவு உணவு: இரவு உணவு லேசான உணவாகவும், சமச்சீரான உணவாகவும் இருக்க வேண்டும். எளிதாக ஜூரணிக்கக்கூடிய உணவுகளை மட்டுமே இரவில் உட்கொள்ள வேண்டும். இரவில் நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் ஆகாமல் இருப்பதும் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 

உணவின் அளவு: உறங்கும் முன் அதிக அளவில் உணவை உட்கொள்வது நல்லதல்ல. இது உடலின் செரிமான அமைப்புக்கு பெரும் சவாலாக அமைகின்றது. இதனால் செரிமான அமைப்பு சீர்குலைகிறது. மேலும், இது அசௌகரியம், வீக்கம், வாயுத்தொல்லை ஆகியவற்றை ஏற்படுத்தும். மெலிந்த புரதங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவை அடங்கிய சீரான உணவுகளை உட்கொள்வது நல்லது. 

காபி, டீ: இரவு நேரங்களில் காஃபி, டீ, கஃபைன் அதிகம் உள்ள பானன்கள், எனர்ஜி பானங்கள் ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவற்றால் தூக்கம் கெடுவதுடன் செரிமான அமைப்புக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த பானங்களுக்கு பதிலாக மூலிகை தேநீர், கிரீன் டீ, மஞ்சள் பால் போன்றவற்றை உட்கொள்ளலாம். 

நடைப்பயிற்சி: இரவு உணவிற்கு பிறகு நடப்பது நல்லது. இது நாள் முழுதும் நம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை எரிக்கவும் நல்ல உறக்கத்திற்கும் உதவுகிறது. இரவு நேர நடைப்பயிற்சி கூடுதல் கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link