9 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கடைசி வாய்ப்பு, முந்துங்கள்!

Thu, 29 Apr 2021-5:51 pm,

சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரித்துளாதால், சாமன்ய மக்களின் பாக்கெட்டுகளில் பெரும் ஓட்டை விழுந்துள்ளது எனலாம். 14.0 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் (LPG gas cylinde ) விலை 809 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இருப்பினும், அனைவரும் சந்தோஷம் அடையும் வகையில் பேடிஎம் (Paytm) ஒரு அசத்தலான ஆஃபரை கொண்டு வந்துள்ளது. அந்தவகையில் 809 ரூபாய் சிலிண்டரை வெறும் 9 ரூபாய்க்கு முன்பதிவு செய்து வாங்க அறிய வாய்ப்பு.

வாடிக்கையாளர்களுக்கான இந்த சிறப்பு சலுகை Paytm இலிருந்து பெறலாம். 2021 ஏப்ரல் 30 வரை இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகையைப் பயன்படுத்த உங்களுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், உடனடியாக இந்த  சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்-

Paytm இந்த சலுகையை 'ஃபர்ஸ்ட் டைம்' என்று பெயரிட்டுள்ளது. அதாவது, Paytm மூலம் முதல் முறையாக எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இது தவிர, பழைய வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையின் பயன் கிடைக்காது.   

 

கேஷ்பேக் எவ்வளவு கிடைக்கும் எரிவாயு முன்பதிவுக்கு நீங்கள் பணம் செலுத்தும்போது, ​​ரூ .800 இன் கிராஷ் கார்டு கிடைக்கும். இதில், நீங்கள் ரூ .10 முதல் ரூ .800 வரை கேஷ்பேக் பெறுவீர்கள்.

Paytm இல் கேஷ்பேக் சலுகையைப் பெறுவது எப்படி * உங்கள் மொபைல் தொலைபேசியில் Paytm செயலியை பதிவிறக்கவும்.  * உங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்யுங்கள். இதற்காக, Paytm செயலியில் Show More என்பதை கிளிக் செய்யவும்.  * பின்னர் ரீசார்ஜ் மற்றும் கட்டண பில்கள் என்பதைக் கிளிக் செய்க.  * ஒரு சிலிண்டரை பதிவு செய்வதற்கான ஆப்ஷனை நீங்கள் காண்பீர்கள். இங்கே, உங்கள் எரிவாயு சப்ளையரை தேர்ந்தெடுக்கவும்.  * முன்பதிவு செய்வதற்கு முன், நீங்கள் FIRSTLPG  என்ற விளம்பர குறியீட்டை உள்ளிட வேண்டும்.  * முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் கேஷ்பேக் ஸ்க்ராட்ச் அட்டை கிடைக்கும்.  * இந்த ஸ்ராட்ச் கார்டை7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link