வெளிநாடு சுற்றுலா... ‘இந்த’ நாடுகளுக்கு செல்ல... அதிகம் செலவாகாது..!!

Wed, 22 May 2024-9:10 pm,

இன்றைய காலகட்டத்தில், டூர் போவதற்கான பேகேஜ்களை பல நிறுவனங்கள் வழங்குவதால், வெளிநாடு செல்வது என்பது எளிதாகி விட்டது. ஐஆர்சிடிசி நிறூவனம் கூட வெளிநாடுகளுக்கான பேக்கேஜ்களை வழங்குகிறது.

புது தில்லியிலிருந்து ஜகார்த்தாவிற்கு ஏறக்குறைய 40,000 -70,000 ரூபாய் செலவாகும். வன சரணாலயம், போரோபுதூர் கோயில், பிரம்பனன் கோயில், தனா லாட், காம்புஹான் ரிட்ஜ் வாக், பெசாகி கிரேட் கோயில், ஜோம்ப்லாங் குகை, சனூர் பீச் மற்றும் ராஜா ஆம்பட் தீவுகள் ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

 

புது தில்லியிலிருந்து பாங்காக்கிற்கு ரூ. 24,000-26,000 செலவாகும். ஃபூகெட், காவ் யாய் தேசியப் பூங்கா, கோ சாமுய், தி கிராண்ட் பேலஸ், பட்டாயா, ஃபை ஃபை தீவுகள், எமரால்டு புத்தர் கோயில் மற்றும் அயுதய்யா ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

புது தில்லி முதல் புனோம் பென் வரை செல்ல சுமார் ரூ. 41.5-48.5K செலவாகும். அங்கோர் வாட், துவால் ஸ்லெங் இனப்படுகொலை அருங்காட்சியகம், பேயோன் கோயில், ராயல் பேலஸ், கோ ரோங் சம்லோம் தீவு, ஏலக்காய் மலைகள் மற்றும் கம்போடியா தேசிய அருங்காட்சியகம் ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

புது தில்லியில் இருந்து வியன்டியானுக்கு செல்ல சுமார் ரூ.39.5K முதல் 63K வரை செலவாகும். குவாங் சி நீர்வீழ்ச்சி, வாட் சியெங்தாங், வியன்டியான், படுக்சே, வாட் ஃபௌ, தாம் காங் லோ, நோங் கியூ, மவுண்ட் ஃபௌசி, தட் இங் ஹாங் ஸ்தூபா, சவன்னாகெட் மற்றும் யானை கிராமம் ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

புது தில்லியிலிருந்து காத்மாண்டுவிற்கு சுமார் 29 முதல் 37.5 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். பசுபதிநாத் கோயில், புத்த ஸ்தூபம், காத்மாண்டு தர்பார் சதுக்கம், சித்வான் தேசியப் பூங்கா, பக்தபூர் தர்பார் சதுக்கம், கனவுத் தோட்டம், பொக்காரா, சாகர்மாதா தேசியப் பூங்கா, மவுண்ட் எவரெஸ்ட் மற்றும் மனாஸ்லு சிகரம் ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

புது தில்லியில் இருந்து ஹனோய் வரை, பயணத்திற்கு சுமார் ரூ. 25-37 ஆயிரம் செலவாகும் மற்றும் ஃபோங் நஹா–கு பாங் தேசிய பூங்கா, மை சன், ஹோய் ஆன், ஃபூ குவோக் தீவு, சாபா மற்றும் கோல்டன் ஹேண்ட் பிரிட்ஜ் ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

புது டெல்லியில் இருந்து பயண செய்ய கட்டணம் ரூபாய் 10,000-18,000 என்ற அளவில் இருக்கும். aஆனால் சென்னையில் இருந்து செல்லும் போது செலவு இன்னும் குறைவாக இருக்கும் நுவரெலியா, சுதந்திர சதுக்கம், சிகிரியா, யால தேசிய பூங்கா, காலி, தம்புள்ளை, அனுராதபுரம், உடவலவே தேசிய பூங்கா, பெந்தோட்டா மற்றும் ஆடம்ஸ் பீக் ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link