PPF: இரட்டிப்பாகும் முதலீடு, வருமான வரி விலக்குடன் சூப்பர் ரிட்டர்ன்
பிபிஎஃப் முதலீட்டு வரம்பு பற்றி நாம் பேசினால், ஒருவர் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஆனால், இந்த முதலீட்டை ரூ.3 லட்சம் வரை அதிகரிப்பதற்கான ஒரு யுக்தியைப் பற்றிதான் இந்த பதிவில் காணவுள்ளோம். இதில் உங்களுக்கு அதே வருமானம் தான் கிடைக்கும் ஆனால் வரி விலக்கும் கிடைக்கும்.
பிபிஎஃப்-இல் வருமான வரியின் பிரிவு 80C இன் படி, 1.50 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் வருமான வரி விலக்கு கிடைக்கும். எனினும், பலருக்கு பிபிஎஃப்-இல் அவர்களது முதலீட்டு வரம்பு தீர்ந்து, அவர்களது வருமானம் வருமான வரியின் கீழ் வரத் தொடங்குகிறது. இதனால் வரி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அத்தகைய சூழ்நிலையில், இவர்கள் மற்ற முதலீட்டு விருப்பங்களைத் தேடத் தொடங்குகிறார்கள். மறுபுறம், வரி நிபுணர்களின் கூற்றுப்படி, முதலீட்டாளர் திருமணமானவராக இருந்தால், அவர் தனது மனைவி அல்லது கணவரின் பெயரில் பிபிஎஃப் கணக்கைத் திறந்து அதில் தனித்தனியாக ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்யலாம்.
வாழ்க்கை துணையின் பெயரில் பிபிஎஃப் கணக்கைத் திறப்பது சந்தேகத்திற்கு இடமின்றி பிபிஎஃப்-இல் முதலீட்டின் வரம்பை இரட்டிப்பாக்கும். ஆனால் அப்போதும் வருமான வரி விலக்கு வரம்பு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக மட்டுமே இருக்கும். ஆனால், பிபிஎஃப் முதலீடு இ-இ-இ பிரிவின் கீழ் வருவதால், வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு கண்டிப்பாக வரி விலக்கு கிடைக்கும்.
வருமான வரியின் பிரிவு 64 இன் படி கணவர் மனைவிக்கு அளிக்கும் தொகை அல்லது பரிசுகளின் மூலம் வரும் வருமானம் கணவரின் வருமானத்தில் இணைக்கப்படும். ஆனால் பிபிஎஃப் முதலீடு இஇஇ பிரிவின் கீழ் வருவதால், அதற்கு முற்றிலுமாக வரிவிலக்கு கிடைக்கும். இங்கு கிளப்பிங் விதிகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.