வெறும் 35 ஆயிரத்திற்கு லேப்டாப்கள்... மாணவர்களுக்கு ஏற்ற டாப் 7 மாடல்கள்!

Wed, 03 Jul 2024-3:06 pm,

Asus Vivobook 14: இந்த லேப்டாப் 14 இன்ச் FHD ரெஸ்சோல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளேவை கொண்டது. Intel Core i3-1215U பிராஸஸரைக் கொண்டது. Radeon கிராபிக்ஸ் கார்டும் உள்ளது. இதில் 8ஜிபி RAM மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. 3 செல் 42Wh பேட்டரி மற்றும் Windows 11 OS உடன் வருகிறது. இதன் அசல் விலை 35,990 ரூபாய் ஆகும். வங்கி தள்ளுபடியில் 35 ஆயிரம் ரூபாயில் வாங்கலாம். 

 

Lenovo ThinkBook 15 G5: அமேசானில் இதனை நீங்கள் குறைவான விலையில் வாங்கலாம். 15.6 இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. AMD Ryzen 3 7330U பிராஸஸர் உடன் வருகிறது. Radeon கிராபிக்ஸ் கார்டுடன் வருகிறது. 8ஜிபி RAM மற்றஉம் 512ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. இதில் 3 செல் 45Wh பேட்டரி உள்ளது. இதில் Windows 11 OS உள்ளது. 

 

Dell Vostro 14 3425: இதில் 14 இன்ச் FHD ரெஸ்சோல்யூஷன் உடன் டிஸ்ப்ளே வருகிறது. AMD Ryzen 5 5500U பிராஸஸர் உடனும், Radeon கிராபிக்ஸ் கார்டு உடனும் வருகிறது. 8ஜிபி RAM மற்றும் 512ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 2 செல் 41Wh பேட்டரி மற்றும் Windows 11 OS. இதன் விலை அமேசானில் 34,990 ரூபாய் ஆகும். 

 

HP Laptop 15s e12143AU: இந்த லேப்டாப் 15.6 இன்ச் FHD ரெஸ்சோல்யூஷன் டிஸ்ப்ளே உடன் வருகிறது. AMD Ryzen 3 5300U பிராஸஸர் உடனும், Radeon கிராபிக்ஸ் கார்டுடனும் வருகிறது. 8ஜிபி RAM மற்றும் 512ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 3 செல் பேட்டரி மற்றும் Windows 11 OS உடன் வருகிறது. 

 

HP Laptop 14s: இதன் விலை 35 ஆயிரத்து 990 ரூபாயாகும். வங்கி ஆப்பரில் இன்னும் விலை குறையும். 14 இன்ச் FHD டிஸ்ப்ளே உடன் வருகிறது. Intel i3-1215U பிராஸஸர் மற்றும் UHD கிராபிக்ஸ் உடன் வருகிறது. 8ஜிபி RAM மற்றும் 512ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 3 செல் 41Wh பேட்டரி உடன் வருகிறது. Windows 11 OS உடன் வருகிறது. 

 

Lenovo IdeaPad 1 82R200BGIN: அமேசானில் இதன் விலை 35,990 ரூபாய் ஆகும். ஆனால் வங்கி தள்ளுபடியில் 35 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். AMD Ryzen 5 5500U பிராஸஸர் உடனும், Radeon கிராபிக்ஸ் கார்டு உடனும் வருகிறது. 8ஜிபி RAM மற்றும் 512ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 3 செல் 45Wh பேட்டரி மற்றும் Windows 11 OS.

 

Acre Aspire Lite AL15 41: இதன் விலை ரூ.34,990 ஆகும். 15.6 இன்ச் FHD ரெஸ்சோல்யூஷன் டிஸ்ப்ளே உடன் வருகிறது. AMD Ryzen 5 5500U பிராஸஸர் உடனும், Radeon கிராபிக்ஸ் கார்டு உடனும் வருகிறது. 16ஜிபி RAM மற்றும் 512ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 3 செல் 40Wh பேட்டரி மற்றும் Windows 11 OS.

 

இந்த மாடல் லேப்டாப்களும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு போதுமானது. அனைத்தும் 35 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link